24 special

2ஜி வை விட பெரிய காவு வாங்க போகிறது! சிக்கியது பெரிய விஷயம்!

mkstalin, savuku shanker
mkstalin, savuku shanker

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2007 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த பொழுது அதன் கூட்டணியான திமுக எம் பி தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பொறுப்பேற்கப்பட்ட பொழுது மாபெரும் சர்ச்சையாகவும் ஊழல் வழக்காகவும் வெடித்தது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு. 2007ல் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ஆ ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு நடைமுறைகள் தொடங்கியது இதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாட்கள் அக்டோபர் 1 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென செப்டம்பர் 25ஆம் தேதி 3:30 மணியிலிருந்து 4:30 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே உரிமை பெற தகுதியானவை என்று அறிவிப்பு வெளியானது இதற்கிடையில் வெளிப்படையாக உரிமம் ஒதுக்குமாறு ஆ ராசாவிற்கு பிரதமர் கடிதம் அனுப்பியதும் ஏல நடைமுறைகள் அனைத்தும் சரியில்லை என்று தொலைத்தொடர்பு துறைக்கு நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. 


இதனை அடுத்து லூக் டெலிகாம் நிறுவனத்திற்கு 2ஜி அலைகற்றை ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் வாட்ச்டாக் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் மனுவை தாக்கல் செய்ததை அடுத்து சிபிஐ தனது முதல் அறிக்கையை தாக்கல் செய்தது. அதோடு மத்திய தொலைதொடர்பு துறை அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டு 2ஜி உரிமம் வழங்கியதில் நீரா ராடியா போன்ற இடை தரகர்கள் போன்றோருக்கு இருக்கும் தொடர்புகளை வெளியிடுமாறு வருமானவரித்துறைக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட வருமானவரித்துறை தொலைதொடர்பு துறையின் முக்கிய கொள்கை விவகாரங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக சில கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை வெளியிட்டது. மேலும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஏல நடைமுறையில் வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்ததாக குறிப்பிட்டது. 

இதற்கிடையில் ஆ ராசா மற்றும் நீரா ராடியா இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலும் வெளியாகி மத்திய அரசு மற்றும் ஆ ராசாவிற்கு உச்ச நீதிமன்றம் 7000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக இருந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ₹1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து ஆராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இதில் சிபிஐ தாக்கல் செய்த இரண்டாவது அறிக்கையில்  திமுக மாநிலங்களவையின் உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது. இதற்கு அடுத்து இதில் ஆ ராசா கனிமொழி உள்ளிட்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அழைக்கப்பட்டனர்.

2007 இல் தொடங்கப்பட்ட இந்த விவகாரம் கடந்த 2017 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையிலே விவாதிக்கப்பட்ட வந்தது ஆனால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஆ ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் 2ஜி வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது இருப்பினும் இதில் இன்னும் குளறுபடிகள் இருப்பதாக சில அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சி தரப்பினரும் குற்றம் சாடி வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் 2ஜி வழக்கால் திமுக சந்தித்த பெரிய பின்னடைவை விட பெரிய பிரச்சினையாக போய்க்கொண்டிருக்கிறது ஜி ஸ்கொயர், திமுகவை காவு வாங்க வள்ளது ஜி ஸ்கொயர் என்று எந்த ஒரு தடுமாற்றம் இன்றி கூறியுள்ளார்! இது திமுக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  ஏற்கனவே சவுக்கு சங்கர் கூறிய அனைத்தும் ஒவ்வொன்றாக தற்போது நடைபெற்று வருவதால் ஜி ஸ்கொயர் திமுகவை காவு வாங்கும் என்ற சவுக்கின் கருத்து அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.