Cinema

பிரபல சிரியல் நடிகையின் விபத்து... நடிகை சொல்வதென்ன..!

Madhumitha
Madhumitha

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வரும் நடிகை மதுமிதா இவர் குடி போதையில் காரை இயக்கியதாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறை இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டும்போது மதுபோதையில் இருந்தாரா மதுமிதா என காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர். மதுமிதா மட்டுமின்றி அவரது ஆண் நண்பர் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 


சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருபவர் மதுமிதா. பெண் அடிமை, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதை நோக்கி தான் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. பரப்பாக சென்று வரும் இந்த சீரியல் தொடர் தற்போது இதில் நடிக்கும் நடிகையும் பரபரப்பான சம்பவத்தில் சிக்கியுள்ளார். கடந்த வாரம் தனது நண்பரின் புது காருக்கு பூஜை போட்டு விட்டு வீட்டுக்கு செல்லும்போது, சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த போலீசார் வாகனத்தின் மீது மோதியதால் அந்த போலீசார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. காரை மதுமிதா  ஒட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விரைந்து வந்த காவலர் கார் மற்றும் மதுமிதா தனது நண்பர் அகியோரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. கார் ஓட்டி வந்த நடிகை மதுமிதா மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின அதனை நடிகை மதுமிதா மறுத்தார். திணைகள் மீது எந்த தவறும் இல்லை காவலர் தான் அதிவேகமாக காரை ஒட்டி வந்தார் என்று மதுமிதாவும் அவரது நண்பரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் தொலைகட்சியில் புரட்சிகரமாக பேசும் நடிகை மதுமிதா நிஜத்தில் போக்குவரத்து விதிமீறலை கூட பாலோ செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுமிதா மது போதையில் காற்றை ஒட்டியதாக வரும் தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார். மேலும், மதுமிதாவிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் நடிகை மதுபோதையில் காரை ஒட்டவில்லை என விளக்கத்தின் மூலம் மக்கள் இடத்தில் உண்மை தெரியவந்துள்ளது. எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்த நிலையில் மதுமிதா மீது சர்ச்சை வந்துள்ளது. நடிகை மதுமிதா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்படுவாரா அல்லது அபராதம் விதிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும். எதிர் நீச்சல் தொடரில் டைட்டிலில் கூட இவரது ஃபோட்டோதான் இடம் பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுமிதா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், "நண்பர்களே என்னை பற்றி சமீபத்தில் ஒரு வதந்தியான செய்தி பரவி வருகிறது. அது எல்லாம் உண்மையே கிடையாது. நான் நலமாக இருக்கிறேன். தவறான செய்திகளை நம்பாதீர்கள்" என்று அதில் கூறியிருக்கிறார்.