
டெல்லியில் கடந்த வாரம் போதைப்பொருள் குடோனை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த பொழுது சுமார் 1200 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 50 கிலோ போதை பொருளை கடத்த முயன்ற மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்த செய்தி பரபரப்பாக வெளியானது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று நபரையும் விசாரணை செய்ததில் இந்த மூன்று பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அந்த மூன்று பேருக்கும் திமுக சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் சினிமா திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன் மற்றும் அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் இணையம் மற்றும் செய்தி சேனல்களில் பரபரப்பாக வெளியானதை அடுத்து திமுக தலைமை திமுக செயலக அணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இப்படி காவல்துறை ஒரு பக்கம் போதை தடுப்பு பிரிவினர் ஒரு பக்கம் என தேடுவதை அறிந்து கொண்ட ஜாபர் சாதிக் தலைமறைவானார். இதற்கிடையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் ஒட்டி உள்ளனர். அதில் டெல்லியில் சிக்கிய போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதால் ஜாஃபர் சாதிக் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி காலையில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஜாபர் சாதிக்கோ தலைமறைவாக இருந்தார் அவரைத் தேடும் பணியில் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் மற்றும் மற்ற சில கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்து காவல்துறையில் சுதந்திரமாக செயல்பட்டு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் போதை பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் பெற்ற பணத்தை யாரெல்லாம் அனுபவித்தார்கள் என்பது குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில், இயக்குனர் அமீர் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் இறைவன் மிகப் பெரியவன் என்ற பாடத்தை இயக்கி வந்துள்ளார், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருந்த அமிரின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்கள் மூலம் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்த விவகாரத்தை கண்டறிந்ததாகவும் உண்மை எது என்பதை எனக்கு தெரியவில்லை எனவும் இருந்தாலும் செய்திகளில் வெளியாகி வருகின்ற குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியது மற்றும் தண்டிக்கப்பட வேண்டியது அதனால் சட்டவிரோத செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் அமிர் கூறியுள்ளார். ஆனால் அமீரின் படத்தை தயாரித்து வந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்ததையும் டெல்லியில் நடந்த சோதனை மூலம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிடிபட்டு தற்போது ஜாபர் சாதிக்கும் சிக்க உள்ளார் என்பதால் அமீர் ஜாபர் சாதிக் குறித்த விவரங்கள் அவர் தலைமறைவாக உள்ள தகவல்கள் அனைத்தும் தனக்கு தெரியாதது போன்று அமிர் கூறுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் திமுக விற்கும் தொடர்பு இருக்கலாம் திமுகவின் நிர்வாகியாக இருந்து வந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட பணத்தை அமிர் திரைப்படத்திலும் கட்சிக்குமே கொடுத்திருப்பார் அதனால் ஜாபர் சாதிக்கிறதற்குப் பின்னால் இவ்விரு தரப்பும் சிக்குவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.