Cinema

கழுவி கழுவி ஊத்துறாங்க...எனக்கு அது வேண்டாம் நயன்தாரா போட்ட ஒரு கண்டிஷன்!

Nayanthara, Vignesh shivan
Nayanthara, Vignesh shivan

கேரளாவில் பிறந்து செய்தியாளராக அறிமுகமானவர் நயன்தாரா தமிழ் சினிமாவில் சரத்குமார் உடன் ஐயா படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், அந்த ஐயா படத்தில் பள்ளி மாணவியாக நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அடுத்துடுத்து முன்னணி நடிகர்கள் உடன் நடித்ததும் நயன்தாராவிற்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் மகுடம் சூட்டப்பட்டது. இப்போ அந்த பெயர் மூலம் நயன்தாரா மன கஷ்டத்தில் இருப்பதாக கூறிவருகிறார்.


நயன்தார தமிழ் சினிமாவிற்கு வந்தும் முன்னணி நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது, அதன் பிறகு அந்த காதல் தோல்வி அடைந்ததும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் படத்தில் நடிக்க வந்தார் அப்போது  தனக்கென்று ஒரு கதையயை தேர்வு செய்து நடிக்க முன் வந்தார் நயன்தாரா. நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுக்கு உயிர், உலக் என்றும் பெயர் வைத்திருக்கிறார். குழந்தை பெற்ற பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்குவார் என்றுதான் பலரும் பேசினார்கள்.

சமீப நாட்களாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமான படத்தில் நடித்து வருகிறார். தற்போது அன்னபூரணி என்ற படத்தில் நயன்தாரா நடிகையாகவும் ஜெய், சத்யராஜ் போன்றவர்கள் நடிப்பில் வெளியான இந்த படம் மக்களிடத்தில் கலவையான விமர்சனம் பெற்றது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த நடிகை நயன்தாரா அன்னபூரணி படத்திற்கு பிறகு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அதில், நயன்தாரா தன்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அதனால் முதல் நாள் காட்சியெல்லாம் பார்க்க தைரியம் இருக்காது. எப்போதும் முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பேன்.

மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னாலே திட்டுகிறார்கள். நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லையா? இல்லை பெண் என்பதால் அப்படி சொன்னாலே திட்டுகிறார்கள். நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லையா? இல்லை பெண் என்பதால் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.'லேடி சூப்பர் ஸ்டார்' என்பதை நோக்கி என் பயணம் இல்லை" என்று கூறினார். இதன் பின்னணியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் நயன்தாராவிடம் கூறி தமக்கு பெயர் பட்டம் ஏதும் வேண்டாம் என கூறியதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.