கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த 24 வயதான ஷர்மிளா டிப்ளமோ வில் மருந்தாளுநர் படிப்பு முடித்திருக்கிறார். இவரது தந்தை ஓட்டுனராக இருந்துள்ளதால் அவரைப் பார்த்து தான் ஓட்டுநராக வேண்டும் என்ற விருப்பத்தில் வாகனங்களை ஓட்ட பயின்று முதலில் ஆட்டு ஓட்டுநராக இருந்து பிறகு கால் டாக்ஸி ஓட்டுநராக மாறி தற்போது கோவை காந்திபுரம் முதல் சோமனூர் வரை செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனாலேயே அதிக youtube சேனலில் இருந்து வந்து ஷர்மிளாவிற்கு பேட்டி எடுத்து சிங்க பெண்ணே என பல விடியோக்கள் வெளிவந்தன!
இப்படி செல்போனில் சமூக வலைதளத்தில் நுழைந்த உடனே இவரது வீடியோ பலரால் பகிரப்பட்டது. கோவையின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுனர் என்ற பெருமையை பெற்ற பாஜகவின் கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் காந்திபுரத்தில் ஷர்மிளா இயக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்து வாழ்த்தினார். இதனை அடுத்து நேற்று அதிகாலையில் திடீரென திமுக எம்பி கனிமொழி சர்மிளா பேருந்தில் ஏறி பயணம் செய்து அவரிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு பின்பு இறங்கி விட்டார். திமுக எம்பி கனிமொழி அந்த பயணத்தை முடித்துக் கொண்டு இறங்கிய சிறிது நேரத்திலேயே ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்படுகிறார் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி அறிந்தவுடன் ஷர்மிளா மிகவும் வேதனை பட்டு வருத்தத்தில் பேருந்து உரிமையாளிடம் காரணம் என்ன என்று கேட்கும்பொழுது எந்த ஒரு பதிலையும் தராமல் அவரை அவமதிக்கின்றனர் என ஷர்மிளா பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார். இப்படி வேலை போனதால் வீட்டில் ஆட்டோ உள்ளது நான் அதையே ஒட்டிக்கொள்கிறேன் என்று வேதனையுடன் செய்தியாளர்கள் மத்தியில் கண் கலங்கி பேசியுள்ளார். இவ்வளவிற்கும் கனிமொழி பேருந்தில் ஷர்மிளா பேருந்தில் ஏறி டிக்கெட் வாங்காததுதான் பிரச்சினை என கூறப்படுகிறது!
கனிமொழி காலையில் பேருந்து ஏறியவுடன் பயண சீட்டு வாங்கி தான் பயணித்தார் என்று சர்மிளா தரப்பில் கூறப்படுகிறது மேலும் நடத்துனர் கனிமொழி தரப்பை டிக்கெட் எடுங்கள் என்றுதான் கூறினேன் என தெரிவித்துள்ளார். இதற்கடுத்துதான் பேருந்தின் உரிமையாளர் உன்னுடைய விளம்பரத்திற்காக எல்லாரையும் பேருந்துக்கு அழைத்து வருகிறாய் எனக்கூறி ஷர்மிளாவை வேலையில் இருந்து நிறுத்தியதாக செய்திகள் வருகின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்பு மிகவும் மகிழ்ச்சியாக பேட்டி அளித்த ஒரு பெண்ணின் வீடியோ இன்று காலை கனிமொழி ஏறிய அடுத்த சில மணி நேரத்தில் அழும் அளவிற்கு சென்றுவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. கனிமொழி கால் வைத்த நேரம் மாலையில் அவருக்கு வேலை போய்விட்டது என்று சமூக வலைதளங்களில் ஓரு புறம் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. மறுபுறம் இது திமுகவின் நாடகம் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் திராவிட அரசு இந்த பெண்ணிற்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தந்துள்ளது என செய்திகள் வெளியாகும் என்று சமூக வலைதள வாசிகள் கூறி வருகின்றனர். எது உண்மை எது நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அரசு வேலை கொடுத்தால் அது மிக பெரிய சர்ச்சையை உண்டாக்கும் என்பதால் தற்போது ஷர்மிளா விஷயத்தில் அடக்கி வாசிக்க திமுக தலைமை முடிவு செய்து இருக்கிறதாம்.