தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று இருக்கும் சூழலில் தற்போது அண்ணாமலை எதற்காக லண்டன் சென்று இருக்கிறார் அதற்கான நோக்கம் என்ன என ஆளும் கட்சியான திமுக தலையை பிய்த்து கொண்டு இருந்தது.மேலும் அண்ணாமலையின் பயண திட்டத்தை அறியவும் எதற்காக அண்ணாமலை சென்றார் எனவும் தீவிரமாக ஆளும் கட்சி தனது அமைப்புகள் மூலம் அறிந்து கொண்டு இருக்கிறது
தமிழகத்தைச் சேர்ந்த பலர், லண்டனில் வசிக்கின்றனர்.அவர்கள், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு அளித்து வருவதுடன், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக தலைவர்கள் மீது, அதிக பற்று வைத்துள்ளனர்.மத்திய அரசு, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க, தீவிரம் காட்டி வருகிறது. இதற்காகவே, 2022 மே மாதம், இலங்கைக்கு சென்ற அண்ணாமலை, அங்குள்ள தமிழர்கள், தமிழ் தேசிய தலைவர்களை சந்தித்து பேசினார். அவர்களின் கோரிக்கை விபரங்களை பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பினார்.
இது, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழக ஆதரவாளர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, இன்று , 'புதிய இந்தியாவை உருவாக்கி வரும் பிரதமர் மோடி' என்ற தலைப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் உரையாற்றுகிறார்.அதில் பங்கேற்க, லண்டனில் உள்ள தமிழர்கள் ஆர்வம் காட்டி, முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள தமிழர்களிடம் மத்திய அரசின் ஒன்பது ஆண்டு சாதனைகள் தொடர்பாக அண்ணாமலை பேசுகிறார்.
மோடி பிரதமராக வந்த பிறகு தமிழகத்தில் நடந்த மாற்றம் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களுக்கு செய்த நன்மைகளையும் அண்ணாமலை பட்டியல் போட இருக்கிறாராம். குறிப்பாக பிரதமர் மோடி இந்திய மக்கள் சார்பாக நம் தமிழ் சொந்தங்களுக்கு இலங்கையில் கட்டி கொடுத்துள்ள வீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை பேச இருக்கிறாராம்.எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் தான் காப்புரிமை பெற்றவர்கள் என்பது போல தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பேசி வரும் நிலையில் தற்போது அண்ணாமலை உண்மையில் தமிழர்களுக்கு நல்லது செய்யும் ஒரே தலைவர் மோடி என்பதை உறுதி பட லண்டனில் வைத்து சொல்ல இருப்பதை அறிந்து பல அரசியல் கட்சிகள் அலறி துடிக்க தொடங்கி இருக்கிறார்களாம்.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நம் இலங்கை தமிழர்களுக்கு கட்டி கொடுத்துள்ள வீட்டின் வீடியோ காட்சிகளை இலங்கையை சேர்ந்த பிரபல யூடுப்பர் எடுத்தவீடியோ பல உண்மைகளை வெளி கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.