24 special

கனிமொழியை சந்தித்த வினை...!கதறி கொண்டு பேட்டி கொடுத்த ஷர்மிளா...!

Kanimozhi,sharmila
Kanimozhi,sharmila

சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா இன்று கண்ணீருடன் கொடுத்த பேட்டி தற்போது விவாத பொருளாக மாறிய நிலையில், கனிமொழி வந்து சென்ற நேரமா இது என நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலை பகிர தற்போது உண்மை என்ன என்பதை பேருந்தின் உரிமையாளரே தெரிவித்து இருக்கிறார்.


கோவை மாவட்டம் காந்திபுரம் - சோமனூர் வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்தை வடவள்ளியை சேர்ந்த 24 வயது  ஷர்மிளா என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என பலரும் பாராட்டினர். இந்த நிலையில் திமுக எம்.பி., கனிமொழி, இன்று (காலை பேருந்தில் ஏறி பயணித்ததுடன், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டினார்.

இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் - உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இது குறித்து ஷர்மிளா கூறுகையில், 'கனிமொழி என்னை வந்து பாராட்டினார். அவர் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார். கண்டக்டர் பயணிகளிடம் மரியாதைக்குறைவாக பேசினார். அவரிடம் மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தினேன். பிறகு, பேருந்து உரிமையாளர் என்னிடம், நீ பிரபலமாகுவதற்காக இதெல்லாம் செய்வாயா எனக் கூறி பணியில் இருந்து விலகுமாறு கூறினார்' என்றார்.

இதற்கு பதிலளித்த பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன், 'ஓட்டுநர் ஷர்மிளாவை பணியில் இருந்து நாங்கள் விலக சொல்லவில்லை, அவராகவே பணி செய்ய விருப்பமில்லை எனக் கூறினார்' என விளக்கமளித்தார்.

தொடர்ச்சியாக ஷர்மிளா புகழ் அடைந்தாரே தவிர தனியார் பேருந்தில் கலெக்சன் வரவில்லையாம், நடத்துனரிடம் ஓனர் கேட்க,எங்க எல்லாரும் வராங்க ஷர்மிளா கூட செல்பி எடுக்குறாங்க ஆனா டிக்கெட் எடுத்து பேருந்தில் பயணிப்பது இல்லை என கூற இனியும் இப்படி சென்றால் நன்றாக இருக்காது என அறிந்த உரிமையாளர் ஷர்மிளாவை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

கனிமொழி டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணம் செய்தார் அதற்காக ஷர்மிளாவை பணியில் இருந்து நீக்கினார்கள் என பரவும் தகவல் உண்மை இல்லை என்றும் பேருந்து உரிமையாளர் தரப்பில் தெரிவித்து இருக்கின்றனர்.