24 special

சோகத்தில் இவானா.. கோலிவுட் கைகொடுக்காவில்லையா..?

Dhoni, Ivana
Dhoni, Ivana

இயக்குநர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா. இப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றாலும் அதில் வரும் இவானா கதாபாத்திரம் ஓரளவுக்கு ரீச் ஆனது என்று சொல்லலாம். அதன் பிறகு தமிழில் படம் பெரியதாக அமையவில்லை அப்படி இருந்தும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் நடித்தும் படம் பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை இந்நிலையில் இணையத்தில் சோகத்தில் இருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை சோகத்தில் தள்ளியுள்ளது.


மலையாளத்தில் வெளியான மாஸ்டர்ஸ் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இவானா. தொடர்ந்து மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவானாவுக்கு தமிழில் இணயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தை விட்டு தமிழில் அவர் நடித்ததும் பெரும் வரவேற்பு கிடைத்தது ரசிகர்களும் இவானாவை நடிகையாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், அந்த படத்திற்கு பிறகு தொழிலில் எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

படவாய்ப்பு கிடைக்காமல் சோகத்தில் இருந்த இவானா மீண்டும் மலையாள சினிமாவிற்கு சென்று விடலாம் என யோசித்து வந்த நிலையில், இயக்குநர் பரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டூடே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பட்டித்தொட்டி எங்கும் பரவி செம ஹிட்டாகி சாதனை படைத்தது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை அள்ளி சாதனை படைத்தது. இவானாவுக்கு நாச்சியார் படம் கொடுத்த வரவேற்பை விட லவ் டுடே படத்தின் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் 2கே கிட்ஸுகளின் மனதை கொள்ளையடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் தமிழில் உருவான எல்ஜிஎம் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். தோனி படத்தில் நடித்தால் வேறலெவலுக்கு சென்று விடலாம் என ஹரிஷ் கல்யாண் படத்தில் இவானா நடித்தார். ஆனால், அந்த படம் அவருக்கு படுதோல்வியை கொடுக்க அடுத்து பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது. அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிகையாக இல்லாமல் துணை நடிகையாக வாய்ப்பு கிடைத்தும் இருந்தாலும் தற்போது இணையத்தில் தனிமையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தனிமையில் வாடும் புகைப்படங்களை வெளியிட்டு, ”Me and time taking a pause….” என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் தான் சோகத்தில் இருப்பதாக கேள்வியை முன் வைக்கின்றனர். தோனி படத்தில் நடித்தும் இப்படியா நிலைமை என பதிவிட்டு வருகின்றனர். முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்தாலே அடுத்தடுத்து படவாய்ப்புகள் தேடி வரும் ஆனால், இவானாவுக்கு மட்டும் ஏன் இப்படி என ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.