Cinema

முற்றிய ஆலியா சஞ்சீவ் விவகாரம்...

aliyamanasa, sanjeev
aliyamanasa, sanjeev

பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வதும் இரண்டு மூன்று வருடங்கள் அல்லது ஐந்து 10 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்தில் வந்த நிற்பது வழக்கமான செய்தியாக வெளியாகி வருகிறது. இந்த செய்தி அவர்களது குடும்பத்தில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ அதே அளவுக்கான தாக்கத்தையும் வருத்தத்தையும் அவர்கள் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுகிறது என்று கூறலாம். இதுவரை தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழி திரை துறையிலும் காதலித்து திருமணம் செய்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் அதிலும் ஒரே திரையில் காதலித்து சேர்ந்தவர்களும் அதிகமாக இருக்கிறார்கள் தொடக்கத்தில் பார்த்தால் கமலஹாசன் மற்றும் கௌதமி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தவர் ஆனால் திடீரென்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்குப் பிறகு சமந்தா மற்றும் சைதன்யாவின் திருமணம் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியை கொடுத்தது ஏனென்றால் இருவரும் பல வருடங்களாகவே காதலித்து வந்ததாகவும் பிறகு பெற்றோர்களின் அனுமதி பெற்று கோவாவை தனது திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தனர்.


ஆனால் திடீரென்று இருவரும் விவாகரத்து பெற்றதாக அறிவித்தனர். இந்த செய்தியை அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் இருவரும் சினிமா வட்டாரங்களில் மிக கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி!இவர்களைப் போன்று அடுத்த ஒரு முன்னணி ஜோடியாக தமிழ் சினிமாவில் பார்க்கப் பட்டவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்கள் இருவரும் சேர்ந்து அதிக அளவிலான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடாமல் இருந்தாலும் சில குறிப்பிட்ட வீடியோ கிளிப்ஸ்கள் மற்றும் இயக்குனர் நடிகர் என்ற முறையில் இருவரும் எடுத்த படங்களின் மூலம் இவர்களது காதல் வெளிவருகிறதாக அவரது ரசிகர்கள் இவர்களின் காதலை கொண்டாடினர் ஆனால் இவர்களது காதலும் கடந்து சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது  இவர்களும் விவாகரத்தில் முடிவு பெற்று தனித்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு அடுத்ததாக பல நடிகை நடிகர்களுக்கு திருமணங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது எப்படி சினிமாவில் ஒரு நடிகை நடிகர்கள் சேர்ந்து திருமணம் செய்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆரவாரத்தை கொடுக்கிறதோ அதேபோன்று சின்னத்திரையில் நடித்து வருபவர்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிக கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது அப்படி சின்னத்திரையில் காதலித்து கரம் பிடித்தவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. 

ஆலியா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் சஞ்சீவி திரையிலிருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் இருவரும் இந்த சீரியலில் நடித்து வரும் பொழுது காதலிக்கு வந்ததாக கூறப்பட்டது இதனை அடுத்து இதே தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சி மேடையில் ஆலியாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சஞ்சீவ் ஒரு ப்ரோபோசனை கொடுத்தார் அதனை ஏற்றுக் கொண்ட ஆலியா திருமணத்திற்கும் தயாரானார்கள் ஆனால் ஆலியாவின் வீட்டில் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை இதனால் சஞ்சீவி பெற்றோர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தற்போது ஒரே தனியார் தொலைக்காட்சியின் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்து சில நாட்களாக இருவரும் பிரிய உள்ளதாகவும் விவாகரத்து பெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது ஆனால் இருவரது youtube சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ஆலியா மற்றும் சஞ்சீவ் ஓரு வீடியோவை பதிவு செய்தனர். அதில் இருவரும் சண்டையிடுவது போன்ற ஒரு காட்சிகள் இருக்கிறது இதுதான் தற்போதைய விவாதம் ஆக உள்ளது என கீழே கொடுக்கப்பட்டிருந்தது, மேலும் எவ்வளவு சண்டை போட்டாலும் விவாகரத்து மட்டும் கிடையவே கிடையாது எங்களுக்கு நடுவில் என்ற வகையில் இறுதி விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் ஆலியா..இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.