24 special

ஆறுமுகங்களைக் கொண்ட விராலிமலை முருகன்... நெய்வேத்தியமாக வினோத பொருள் வைக்கப்படுவதன் மர்மம்!

murugan temple
murugan temple

முருகன் என்றாலே குன்றின் மேல் அமர்ந்திருப்பவர் என்பதற்கு ஏற்ப குன்றியிருக்கும் இடத்தில் எல்லாம் முருகன் இருக்கிறார். பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை என முருகனின் அறுபடை வீடுகள் அனைத்துமே குன்றின் மீது தான் அமர்ந்திருக்கிறது இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் விராலிமலையின் முருகன் கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமர்ந்திருந்தாலும் மிகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருச்சியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் புதுக்கோட்டைக்கு வட மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள விராலிமலையின் குன்றில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு முருகன் ஆறுமுகங்களைக் கொண்டும் 12 கைகளுடனும் வள்ளி தெய்வானை உடனும் காட்சியளிக்கிறார். அதோடு பழனியைப் போன்றே இங்குள்ள முருகனுக்கும் சந்தன நெய்வேத்தியம் செய்யப்படுவதாகவும் பாலும் பழமும் பஞ்சாமிர்தமும் நெய்வேத்தியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கோவிலின் ஆறுமுக பெருமாளுக்கு உச்சிக்கால வழிபாடு நடைபெறும் பொழுது சுருட்டு நெய்வேதியமாக வைக்கப்படுவதாகவும் இங்கு முருகன் மயில் மீது வீற்றிருந்து அந்த மயில் தெற்கு பக்கம் திரும்பி இருப்பதால் அந்த மயிலுக்கு அசுர மயில் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. 


விராலிமலையில் முருகன் கோவில் அமைவதற்கான ஒரு தல வரலாறு கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடத்தில் குரா என்ற மரம் இருந்ததாகவும் ஒரு வேடன் ஒரு புலியை விரட்டி இந்த மலை வழியாக வந்த போது குரா மரம் இருந்த இடத்தில் புலி சென்ற பொழுது திடீரென்று புலி மறைந்ததாகவும் இதனை கண்ட வேடன் அதிர்ச்சி அடைந்து இங்கு ஏதோ தெய்வ சக்தி இருப்பதையும் உணர்ந்து முருகனை அவ்விடத்தில் வழிபட ஆரம்பித்தான். இதனால் முருகன் அங்கு அவனுக்கு காட்சியளித்து அருள் பாலித்ததோடு சண்முகநாதன் என்ற பெயரில் அங்கேயே தங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். இந்தக் கோயிலைக் குறித்து திருப்புகலில் 18 இடங்களில் அருணகிரிநாதர் பாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் இடும்பன் சன்னதி பாறை குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும் உள்ளது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி போன்ற முருகனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் சிறப்பான உற்சவங்கள் இங்கு நடைபெறுவதாகவும் அந்த உற்சவங்களில் கலந்து கொள்பவர்களின் மனம் நிறைந்து வேண்டிவற்றை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நோய் மற்றும் துன்பங்கள் நீங்க கல்வி, செல்வம் மற்றும் ஆயுள் நீடிக்கவும் விராலிமலைகள் அமைந்துள்ள முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருவதாகவும் கூறப்படுகிறது. வெளியூரில் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் சில பக்தர்கள் இங்கு வந்து முருகனை தரிசித்து விட்டு செல்வதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். எந்த ஒரு முருகன் கோவிலிலும் இல்லாத ஒரு வழிமுறையாக உச்சிக்கால பூஜையின் போது இக்கோவிலில் முருகனுக்கு சுருட்டு நெய்வேதியமாக வழங்கப்படுவதற்கு பின்னும் ஒரு கதை இருப்பதாக கூறப்படுகிறது.

 அதாவது குமாரவாடி என்ற ஜமீனின் நிர்வாகியாக பணிபுரிந்து வந்த கருப்பு மூத்த பிள்ளை என்பவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் முருகனை தரிசித்த பிறகு உணவு உன்னும் பழக்கம் கொண்ட தீவிர முருகன் பக்தர். அப்படி வழக்கம்போல் ஒரு வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானை தரிசிக்க விராலிமலை வந்த கருப்பு முத்து பிள்ளை வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியதை பார்த்ததும் ஒரு மேடான பகுதியில் ஒதுங்கினால், இரவு முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்தது, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது... நீண்ட நேரமாக காத்திருந்த கருப்பு முத்து பிள்ளைக்கு பசி பொறுக்க முடியாமல் பசி எடுக்க ஆரம்பித்தது ஆனால் உணவு இல்லை முருகனையும் தரிசிக்க முடியவில்லை ஒரு சுவருட்டும் அவர் கையில் இல்லாததால் மிகவும் வருத்தத்தில் நின்ற அவருக்கு முருகன் அவர் முன் தோன்றி சுருட்டும் நெருப்பும் கொடுத்து அவருடைய மன வேதனையை போக்கியதாக கூறப்படுகிறது இதனால் மகிழ்ச்சியை அடைந்த கருப்பு மூத்த பிள்ளை மறுநாள் வெல்லம் வடிந்த பிறகு விராலிமலை முருகன் ஆலயம் சென்று அங்கு இருந்தவர்களுக்கு நடந்தவற்றை தெரிவித்து முருகனுக்கு சுருட்டையும் நெய்வேதியமாக வழங்குதல் என்று கூறினார். அன்றிலிருந்து முருகப்பெருமானுக்கு சுருட்டும் நெய்வேத்தியமாக விராலிமலை கோவிலில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.