தமிழ் மற்றும் பிற மொழிகளில் முன்னணி நடிகர்களோடு இணைந்து பிரபல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார்!! இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இவருடைய தந்தை சரத்குமார் தமிழ் போன்ற பல மொழி திரைப்படங்களில் கதாநாயகராகவும் நடித்துள்ளார். இவர் நடிக்கும் படங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் கதாநாயகியாகவும் வில்லியாகவும் மாறி மாறி பல வித்தியாசமான முகங்களை காட்டிக்கொண்டு வருகிறார். 2018ல் கூட விஷாலின் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் முதன்மையான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் உடன் சேர்ந்து சர்க்கார் படத்தில் வில்லி கேரக்டர் பண்ணியிருந்தார்!! இது அதிக அளவு மக்களால் வரவேற்கப்பட்டது!!!
மேலும் சமீபத்தில் கூட தனது உடல் நிலையை குறைத்து அனைத்து ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இதை தொடர்ந்து தற்போது அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. மும்பையை சேர்ந்த கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ் உடன் தனது நிச்சயதார்த்தத்தை செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிக அளவில் பரவி வருகிறது!! இதை தொடர்ந்து அவர் நிச்சயதார்த்தத்திற்கு அடுத்து திருமண வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது வரலட்சுமி சரத்குமார் பற்றி இணையத்தில் தவறாக ஒரு செய்தி பரவி வருகிறது!! அது என்னவெனில் தற்போது தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் போதை விவகாரம் தான்! இதில் இவருக்கும் சம்பந்தம் உண்டு என்று செய்திகள் பரவி வருகிறது. ஏனென்றால் தற்போது போதை விவகாரத்தில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தினை சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் போட்டுள்ளதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி பார்த்தால் வரலட்சுமி ஒரு நடிகை தான்!! இந்த வகையில் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற விதத்தில் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வளம் வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்த பேச்சுக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரலட்சுமி ஒரு பதிவினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்!! அது என்னவென்றால், " நமது திறமையான ஊடகங்கள் பழைய போலி செய்திகளை பரப்புவதை தவிர வேற எந்த ஒரு செய்தியையும் தருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது!! அன்பான பத்திரிக்கையாளர்களே, குறிப்பாக சுயமாக அறிவித்துக்கொள்ளும் செய்தித் தளங்கள் மற்றும் உங்கள் கட்டுரைகள், நீங்கள் ஏன் சில உண்மையான பத்திரிகைகளைச் செய்யத் தொடங்கக்கூடாது!
உங்கள் பிரபலங்களுடன் குறைகளைக் கண்டறிவதை நிறுத்துங்கள், நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம்.! உங்கள் உண்மையான கவனம் தேவைப்படும் 1000 தீவிர சிக்கல்கள் உள்ளன! எனது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகளும் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. பொய்யான குப்பை ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். மேலும் எங்களைப் பெருமைப்படுத்தும் பத்திரிகையை மீண்டும் கொண்டு வாருங்கள்" என்று பதிவிட்டு இப்படி பரவும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
மேலும் போதை கடத்தல் விவகாரத்தில் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் இது பற்றிய தகவல்கள் இணையத்தில் அதிக அளவில் பரவிக் கொண்டு வரும் நிலையில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இவர் இப்படி ஒரு பதிவினை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையவாசிகளிடையே கவனம் பெற்றுள்ளது.