24 special

மோடி கொடுத்த அசைமென்ட்! அடுத்த நொடி களத்தில் இறங்கிய எடப்பாடி! காத்திருந்த திமுகவுக்கு ஷாக்!

PMMODI,EDAPADIPALANISAMY
PMMODI,EDAPADIPALANISAMY

திமுக தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்து தக்கவைத்துக் கொள்வதற்காக, ‘உறுப்பினர் சேர்க்கை’ என்கிற திட்டத்தை மறைமுகமாகச் செய்து வருகிறது ஆளும் தி.மு.க தரப்பு. இது ஒருபுறமிருக்க, சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் எத்தனை பேர் தேறுவார்கள் என்கிற பட்டியலையும் சர்வே மூலம் தயார் செய்து வருகிறார்களாம். அதன்படி, தலைநகரிலிருந்து தொடங்கப் பட்டிருக்கும் சர்வே, தலைமைக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறதாம். அதாவது, `தலைநகர் மாவட்டத்திலுள்ள 16 எம்.எல்.ஏ-க் களில், 8 பேர் மீண்டும் போட்டியிட்டால் தேறுவது கஷ்டம்' என ரிசல்ட் வந்ததுதான் தலைமையின் அதிர்ச்சிக்கு காரணமாம். கைக்குள் இருக்கும் தலைநகரிலேயே இந்த லட்சணத்தில்தான் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அப்படியென்றால், மாநிலம் முழுக்க எத்தனை பேர் தேறுவார்கள் என்று தெரியவில்லையே... வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதே பெரும்பாடு ஆகிவிடும் போலயே...' எனச் சோர்ந்து போயிருக்கிறதாம் தி.மு.க தலைமை


அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி வந்த சென்ற பிறகு எடப்பாடியின் முகத்தில் சந்தோச கலை தாண்டவமாடுகிறதாம். தென் தமிழகத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் மாற்ற மாவட்டங்களில் தீவிர வேலையை பாருங்கள் என கூறிவிட்டாராம்..ஏற்கனவே எழுச்சி பயணத்தில் அவர்களின் மாவட்ட செயலாளர்கள் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். கீழ் மட்ட அளவில் பாஜக அதிமுகவினர் இணக்கமாக செல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தியையும்  பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். இது திமுக தலையில் பெரிய இடியை இறக்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமகவின் பலத்தை குறைக்க திமுக சதி திட்டம் தீட்டி வந்த நிலையில் அங்குள்ளவர்கள் திமுக பக்கம் செல்லாமல் பாஜக அதிமுகவுக்கு ஆதரவு கரம் கொடுக்க தொடங்கியுள்ளார்கள். 

இதன் வெளிப்பாடு தான்  விழுப்புரத்தில் எடப்பாடியின் எழுச்சி பயணத்தில் கூடிய கூட்டம். அது மட்டுமில்லாமல் கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரமாண்டமாகக் கூட்டத்தைக் கூட்டியதுதான் ஆச்சர்யம். இங்கேயெல்லாம் எடப்பாடி வருவதற்குத் தாமதமானபோதும், கூட்டம் கலையவில்லை. பாஜகவினர் முழு ஒத்துழைப்பும் கொடுத்துள்ளார்கள். கூட்டணியை பிரிக்க திமுகவும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதை செய்யமுடியாமல் தவித்து வருகிறது. 

எடப்பாடியின் இந்தப் பிரசாரத்தை, பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனும் சேர்ந்துதான் தொடங்கிவைத்தார். அன்றிலிருந்தே, எடப்பாடி பேசும் இடமெல்லாம் பா.ஜ.க-வினரும் கொடியோடு கூட்டத்தில் பங்கேற்றனர். பா.ஜ.க மாவட்டத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆரம்பித்தார் எடப்பாடி. அ.தி.மு.க - பா.ஜ.க தொண்டர்களிடையே இப்போதுதான் உறவுநிலை கொஞ்சம் மேம்படத் தொடங்கியிருக்கிறது. தான் எதிர்பார்க்காத அளவுக்குக் கூட்டம் திரண்டதால், எடப்பாடி ரொம்பவே நெகிழ்ந்துவிட்டார். அது, அவரது பேச்சிலும் எதிரொலித்தது.

 ஆட்சிக்கு வந்ததும், தாலிக்குத் தங்கம் திட்டத்தில் மணமகளுக்குப் பட்டுச்சேலை வழங்கப்படும்’ என்று வாக்குறுதியளித்தார். ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக ஒரு பவுன் தங்கம் அளிக்கப்பட்ட அந்தத் திட்டத்தை, தி.மு.க அரசாங்கம் நிறுத்திவிட்டது. இன்று, ஒரு பவுன் தங்கத்தின் விலை 75,000 ரூபாய். `அதனுடன் பட்டுச்சேலையும் வழங்கப்படும்’ என எடப்பாடி அறிவித்திருப்பது, பெண்களிடமும் நெசவாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது எடப்பாடியின் இந்த முதல் ரவுண்ட் சுற்றுப்பயணத்தில், அவர் எதிர்பார்த்த பல சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. என உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல் பிரதமர் வந்து சென்றுள்ள நிலையில் பாஜகவுக்கு  முக்கிய அசைமென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதிமுக பலவீனமாக இருக்கும் இடங்களில் பாஜக பிரச்சாரத்தை தொடங்கவும் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். சமுக ரீதியாக பல தலைவர்களை சந்திக்கவும் அசைமென்ட் கொடுக்கபட்டுள்ளதாம். குறிப்பாக தென் மண்டலத்தில் பாஜக மிகத்தீவிரமாக களம் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.