
திமுகவின் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் 2021 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொண்ட பொழுது கரூர் மாவட்டத்தின் எம்பி யாக காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணி வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதோட சரி அதற்கு பிறகு கரூர் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்த ஜோதி மணி மீது அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் அதிர்ப்தியில் இருந்து வந்தனர் என கூறப்படுகிறது. அப்பொழுது திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்த ஜோதி மணியை எத்தனை முறை நீங்கள் தொகுதி பக்கம் வந்திருக்கிறீர்கள் தேர்தல் என்றால் வருவீர்கள் இல்லையென்றால் எட்டிகூட பார்ப்பதில்லை என்ற வகையில் கரூர் தொகுதி என்ற அந்த மக்கள் ஜோதிமணியே தொகுதியை கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாடினர். அதுமட்டுமின்றி கரூர் தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் பெருவாரியான மக்கள் அண்ணாமலையை வரவேற்க கூடியிருந்ததும் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்தது.
இதனால் காங்கிரஸ் தலைமையும் ஜோதிமணி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தது. இதனை அடுத்து தேர்தல் வேலைகளில் ஒவ்வொரு கட்சியும் ஈடுபட்டு வருகிற நிலையில் திமுக மாவட்ட வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை சென்னை அறிவாலயத்தில் நடத்தி வந்தது அதன்படி கரூர்தொகுதிக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறும் பொழுது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் மீண்டும் காங்கிரசிற்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட கூடாது என்றும் மீண்டும் ஜோதிமணி கரூர் தொகுதியில் போட்டியிட கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தனர். இது குறித்த செய்திகள் அனைத்தும் பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஜோதிமணி மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது கரூர் மாவட்டத்தின் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் மாவட்டச் செயலாளர் தலைமை வகிக்க இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலர் பேசியுள்ளனர்.
அப்படி பேசிய அனைவருமே 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்று தர வேண்டும் என்றும் தற்போதைய கரூர் தொகுதியின் எம்பி ஆக உள்ள ஜோதி மணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவே கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி க பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர் செந்தில்குமார் தனது ரத்தத்தில் கடிதம் ஒன்றையும் எழுதி முன்னாள் மாவட்ட தலைவரான பேங்க் சுப்பிரமணியனிடம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் கூட்டணியில் கரூர் எம்பி தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு பெற்று தர வேண்டும் அதோடு எம்பி ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது, அதே சமயத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த கடிதத்தை மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தது ஜோதிமணி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கரூர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை வேறு தொகுதிகளை பெற்று மீண்டும் எம்பி ஆகி விடலாம் என்று நினைத்தால் நம் கட்சியினரே நமக்கு எதிரியாக உள்ளார்களே என ஜோதிமணி தனது நெருங்கிய வட்டாரங்களில் புலம்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.