Cinema

அஞ்சலி செலுத்தாமல் திரும்பி சென்ற விஜய்... அஜித்துடன் மோதலா? வெளியான முக்கிய தகவல்!

Vijay, Ajith
Vijay, Ajith

சென்னை அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமயமலைக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது, அங்குள்ள சட்லஜ் ஆற்றில் விழுந்து அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நடிகரும் தமிழக வெற்றி கழக கட்சி தலைவருமான விஜய் அவர்களது வீடு வரை சென்ற நிலையில் விஜய் அஞ்சலி செலுத்தாமலேயே திரும்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. இவர் திரைப்பட இயக்குனராக இருக்கிறார். இந்நிலையில் புதிய படப்பிடிப்புக்காக இமாச்சல பிரதேசத்தில் லோகேஷன் பார்க்க வெற்றி துரைசாமி சென்றார். கடந்த 4ம் தேதி அவரது கார் சட்லெஜ் நதியில் விபத்துக்குள்ளானது. அப்போது அவரது டிரைவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். வெற்றி துரைசாமியின் உதவியாளர் காயங்களுடன் மீட்டனர். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கவில்லை என கூறப்பட்டது. சுமார் 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமி உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வெற்றி துரைசாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சியினரை தொடர்ந்து சினிமா நட்சத்திரமான நடிகர் அஜித் காலையிலேயே வெற்றி துரைசாமியின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடிகை ஷாலினி மாலை வரை வெற்றி துரைசாமி வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார் என தகவல்கள் வெளியாகின. அஜித் , துரைசாமி இருவரும் வெகு நாட்களாக நண்பர்களாக இருந்துள்ளனர். அதனால் வெற்றி துரைசாமி உடன் இருக்கும் அஜித் புகைப்படம் இணையத்தில் பதிவிட்டு முன்னதாக இரங்கல் தெரிவித்தார் ஷாலினி அஜித்.

அஜித்தை தொடர்ந்து, விஜய்யும் வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். அங்கு வந்த விஜய் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் விஜய் அங்கே செல்லாமல் திரும்பி விட்டதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய்க்கு பதிலாக புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அங்கே சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். விஜயகாந்த் மறைந்த போது அவ்வளவு கூட்டத்திலும் விஜய் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை விட நேற்று அந்த அளவிற்கு கூட்டம் இல்லையே என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. விஜய் நடிகராக இருந்து அரசியல் தலைவராக வந்த பிறகு முதன் முதலாக வெற்றி துரைசாமி வீட்டிற்கு புறக்கணித்துள்ளார் என கூறப்படுகிறது. ஒருவேளை அஜித் அங்கு இருந்ததால் விஜய் புறக்கணித்தாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.