24 special

கரூரில் ஜோதிமணி எம் பிக்கு விழுந்த பெரிய அடி!

udhayanithi, jothimani
udhayanithi, jothimani

தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையிலான கூட்டங்களை நடத்தி வருகிறது அதன்படி திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை மாவட்ட வாரியாக சென்னையில் நடத்தி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர் அந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகளும் அந்த தொகுதியில் உள்ள பிரதான பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி தற்பொழுது சில தொகுதிகளில் எம்பி யாக உள்ள திமுக நிர்வாகிகளை மீண்டும் எம்பி தேர்தலில் நிறுத்தக்கூடாது என்றும் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூறியிருப்பது திமுகவில் ஏற்பட்டுள்ள கட்சி பிரச்சினையை வெளி கொண்டு வந்தது. ஏற்கனவே பல மாவட்டங்களில் கவுன்சிலர் மற்றும் மேயர் அவர்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனை திமுகவில் வலுவெடுத்து வரும் நிலையில் இப்படி திமுகவைச் சேர்ந்த எம்பிகள் அந்த தொகுதியில் நிற்க வேண்டாம் என்று திமுகவின் நிர்வாகிகளே கூறியிருப்பது அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


குறிப்பாக தர்மபுரி மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எம்பிகள் மீண்டும் அதே தொகுதியில் நிற்க கூடாது என்று மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர் அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பரிசளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது தர்மபுரி எம்பி செந்தில்குமார் மற்றும் மதுரை எம்பி வெங்கடேசன் தரப்பை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த நிலையில் திமுகவில் மட்டும் இன்றி திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசிடமும் இது போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிரச்சனைகள் அவ்வப்போது செய்திகளில் வெளியான நிலையில் தற்பொழுது நேரடியாகவே கட்சியின் நிர்வாகிகள் தமிழக காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் போட்டுடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகங்கை எம் பி கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கக் கூடாது என்றும் மொத்தமாக அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் பதறிப் போய் உள்ள கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திமுகவின் நிர்வாகிகள் காங்கிரஸ் சார்பில் கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதி மணிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜோதிமணி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்படக்கூடாது என்றும் கூறியுள்ளனர். ஏனென்றால் அமைச்சர் ஜோதிமணிக்கு கரூர் தொகுதியிலே கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருகிறது சமீபத்தில் கூட கரூர் தொகுதிக்கு ஜோதிமணி சென்று இருந்த பொழுது மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த பொழுது இவை அனைத்தும் சரி செய்யப்படும் அதற்கான ஆட்கள் வருவார்கள் இல்லையென்றால் நானே வருவேன் என்ற வகையில் எம்பி ஜோதிமணி கூறியதற்கு நீங்கள் எப்படி வருவீர்கள் நீங்கள் தான் அடுத்து வரவே மாட்டீர்களே எத்தனை முறை இந்த தொகுதிக்கு இதுவரை வந்து உள்ளீர்கள் நான் உங்களை பார்த்ததே இல்லையே என பொதுமக்கள் மத்தியில் குரல் எழும்பியுள்ளது. இப்படி ஜோதிமணிக்கு கரூர் தொகுதியில் எதிர்ப்புகள் நிலை வருவதும் மீண்டும் கரூர்த்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நின்றால் நிச்சயம் தோல்வியை தான் தழுவுவார் என்றும் திமுக நிர்வாகிகள் தற்பொழுது காங்கிரசை கரூர் பகுதியில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளது.