அதிமுகவிலிருந்து தமிழ் திரை உலகின் முக்கிய நடிகரும் இயக்குனருமான எஸ்வி சேகர் பாஜகவில் இணைந்தார். மேலும் பாஜகவில் தனக்கு மிக முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் இவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான பொறுப்புகள் பாஜகவில் கொடுக்கப்படாத காரணத்தினாலும் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்கப்பட்டதற்கு பிறகு இவர் பாஜகவில் ஒதுக்கப்படுவதாகவும் கூறி பல விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை மாநில தலைவர் அண்ணாமலை மீது சுமத்தி வருகிறார். அதுமட்டுமின்றி சமூக வலைதளத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் விமர்சித்து தொடர்ந்து அண்ணாமலையை சீண்டி வருகிறார். அதாவது திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் நமது குடும்ப செலவுகளுக்கு தேவையான பணத்தையும் வாடகை பெட்ரோல் என அனைத்திற்கும் நண்பர்களை உதவுகிறார்கள் என்று கூறியதற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் எஸ்வி சேகர் ரத்த சம்பந்த உறவுகளைத் தவிர யார் பணமாக உதவி செய்தாலும் வருமான வரி கட்ட வேண்டும் , ஏதாவது பழைய பொருள் வாங்கினால் 19 ஆயிரத்து ரூபாய்க்கு மேல் பணமாக கொடுக்கக் கூடாது மாதம் 10 லட்சம் வீதம் 12 மாதத்திற்கு 1.2 கோடி வருகிறது இதுவே பெரிய ஊழலா இருக்கே ஐடி தம்பி இது என்னனு விசாரி என்று கிண்டல் அடிக்கும் விதத்தில் பதிவிட்டு இருந்தது வைரலானது.
அதுமட்டுமின்றி இதற்கு அடுத்ததாக லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் அமோகமாக வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசுல வாழ்பவனே மானஸ்தன் நேர்மையானவன் தலைமைக்கு தகுதியானவன் என்று எஸ் வி சேகர் பதிவிட்டதற்கு விமர்சனங்களை பெற்றார். இப்படி தொடர்ச்சியாக தலைமைக்கு அண்ணாமலை ஏற்றவர் அல்ல விரைவில் அவரை தேசிய தலைமை கட்சியை விட்டு நீக்கும் என்ற பல விமர்சனங்களையும் அண்ணாமலை குறித்த புகார்களையும் முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணம் கேலிக்குரிய விஷயம் என்றும் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நடப்பது, இவருக்கு பின்னால் கூட்டம் வரவில்லை என்றால் கூட்டத்தின் நடுவில் இவர் நிற்பது! என குழந்தைத்தனமான அரசியலை செய்து கொண்டு வருகிறார். ஆனால் அண்ணாமலை திறமைசாலி எதில் என்றால் மறைந்திருந்து போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது, மற்றொருவர் பேசுவதை ஒட்டு கேட்டு அந்த டேப்பை வெளியிடுவது, அதில் எல்லாம் திறமையாக இருக்கிறாரே தவிர கட்சி நடவடிக்கைகளில் இவரது திறமை பூஜியம் என இருக்கிறது அந்த பூஜியம் குறித்த ரிசல்ட் மே மாதத்தில் தெரியும் என்று அண்ணாமலையை கேலி செய்யும் வகையில் பேசி உள்ளார்.
இதற்கு பாஜகவின் தொண்டர்கள் மற்றும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து விசாரிக்கும் பொழுது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதால் அண்ணாமலையை பாஜகவில் உள்ள ஒரு மூத்த நிர்வாகி இகழ்ந்தும், விமர்சித்தும் பேசினால் அண்ணாமலையின் செல்வாக்கு குறையும் என அறிவாலய தரப்பிலிருந்து அசைமென்ட் கொடுக்கப்பட்டதாக அரசியல் விமர்சனங்களை இணையதள வாசிகள் முன்வைத்து வருகின்றனர் ஆனால் இது குறித்து எஸ்வி சேகர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் எஸ்.வி.சேகர் போன்றோர் அண்ணாமலையை விமர்சித்து பேசினால் அது அண்ணாமலைக்கு பின்னடைவாக இருக்கும் பாஜக மூத்த தலைவர் ஒருவரே இப்படி அண்ணாமலையை விமர்சிக்கிறார் என பொதுவெளியில் சுட்டிக்காட்டலாம் என்பதும் அறிவாலயத்தின் கணக்காக இருப்பதாக வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.