லோக்சபா தேர்தலுக்கான மும்முரமான வேலைபாடுகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது மேலும் பிரச்சாரங்களை எப்படி மேற்கொள்வது, என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம் பக்கம் இருக்கலாம் என்ற பல வேலைகள் மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் திமுக, அதிமுக, வி சி க, நாம் தமிழர் என ஒவ்வொரு கட்சியும் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் எந்த தொகுதியில் போட்டியெல்லாம் என்பது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு சில தொகுதிகளின் வேட்பாளர்களையும் சில கட்சிகள் அறிவித்து வருகிறது. மறுபக்கம் பாஜக கடந்த வருடத்திலேயே மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கு உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் துரிதப்படுத்திவிட்டது என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடை பயணம் பாஜகவிற்கு சாதகமாக தெரிந்துள்ளது மேலும் இந்த நடைபயணத்தால் அவருக்கு கொடுக்கப்படும் செல்வாக்கு ஆதரவுகள் அனைத்தும் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் பாஜகவின் தேசிய தலைமை தமிழகத்தில் பாஜக அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் பிரச்சாரங்கள் வேட்பாளர்கள் தேர்வு என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் பக்கம் அதிக கவனம் செலுத்துவதாகவும் ஏற்கனவே இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் இரண்டு முறை தமிழகத்திற்கு வந்த பிரதமர் பிப்ரவரி மாதம் அதாவது அடுத்த வாரத்தில் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது அப்படி பிரதமர் தமிழகத்திற்கு வரும் பொழுது மாபெரும் பிரச்சார கூட்டம் ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பல கட்சிகள் தங்கள் பிரசாரங்களை சமூக வலைத்தளம் முதல் தொலைக்காட்சி, மொபைல் போன்கள் மற்றும் சாலை ஓர போஸ்டர்கள் பேனர்கள் என பல வகையில் செய்து வருகிறது. இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் இந்தியாவின் பெருமைகள் மற்றும் இந்தியாவின் புகழை உயர்த்தி உள்ளது தமிழகத்தில் அதிக வரவேற்பை பெற்று கடந்த தேர்தலில் பிரதமருக்கு இருந்த எதிர்ப்பு அலைகள் குறைந்துள்ளதாகவும் மக்கள் பாஜகவை தமிழகத்தின் ஒரு கட்சியாக அங்கீகரித்து ஓட்டு போடுவார்கள் என்ற ஒரு கணிப்பையும், அரசியல் விமர்சகர்களும் மூத்த அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக பணியாற்றி வரும் ஆங்கர் பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இணைந்து தொகுத்து வரும் ஊ சொல்றியா ஊ ஹம் சொல்றியா 2 நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பேசி உள்ளனர். அதாவது இந்த நிகழ்ச்சியில் பாடகியான சிறுமி ஸ்ரீனிதா கலந்து கொண்ட பொழுது தொகுப்பாளினி பிரியங்கா, ஸ்ரீநிதா செய்தது தெரியும்ல பிரைம் மினிஸ்டர் மோடி அவர்களிடம் பாட்டு பாடி பாராட்டை பெற்றுள்ளார் என்று கூறி பாராட்டியதோடு பிரதமருடன் பேசிய பொழுது ஏற்பட்ட தருணத்தை கூறவும் வைத்துள்ளார். பொங்கல் விழா அன்று மேடையில் பாடி முடித்ததற்கு பிறகு பிரதமர் எங்கள் அனைவரையும் கீழே வர சொல்லி அருமையாக இருந்தது என்று கூறினார் அவர் ஹிந்தியில் கூறினாலும் எனக்கு புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, அதற்கு பிறகு அவர் அணிந்திருந்த சால்வையை எனக்கு போட்டு பாராட்டினார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று ஸ்ரீனிதா கூறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அதிக மக்களின் ஆதரவுகளைக் கொண்டுள்ள இந்த தனியார் தொலைக்காட்சி இதுபோன்று செய்யக்கூடாது என்று சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, ஆனால் இது குறித்து விஜய் டிவி எந்த ஒரு அதிகார அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.