24 special

அமீரை தொடர்ந்து வெற்றிமாறனுக்கும் தொடர்பா?

ameer, vetrimaran
ameer, vetrimaran

கடந்த 15ஆம் தேதி அன்று டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சில குடோன்களில் சோதனை யிட்டதில் 3500 கிலோ போதை பொருட்கள் ஒவ்வொரு ஆண்டில் கடத்தப்பட்டுள்ளதையும் அதன் மதிப்பு ரூபாய் 2000 கோடி என்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அதாவது போதைப்பொருள் தயாரிக்கப்படுவதற்கு முக்கிய வேதிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்ததை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சில கும்பல் கடத்தி வருவதாக அந்தந்த நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவலை கொடுத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்து மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் இருந்த குடோனில் சோதனை இட்டனர் அப்பொழுது குடோனில் இருந்த கடத்தல் கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர். 


அப்படி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த சினிமா திரைப்பட தயாரிப்பாளரும் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன் மற்றும் அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோருக்கும் டெல்லியில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் ஜாஃபர் சாதிக்கு திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அதே சமயத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் போலீஸ் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட ஜாபர் சாதிக் தலைமுறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னதாக  தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து போதைப்பொருள் பழக்கமும் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வந்த நிலையில் இப்படி திமுக நிர்வாகி சம்பந்தப்பட்ட ஒரு போதை கடத்தல் விவகாரம் தமிழகத்தில் வெடித்திருப்பது அரசியல் வட்டாரம் மட்டும் இன்றி மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ளது. 

மேலும் டெல்லி போதை போல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 23ஆம் தேதி அன்று மயிலாப்பூர் சாந்தம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நீரல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் ஒட்டி உள்ளனர். அதோடு புரசைவாக்கம் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் அமிர் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை இயக்கி வந்தவர்.. ஜாபர் சாதி குறித்த கடத்தல் விவகாரத்தை தெரிந்தவுடன் சட்டவிரோத செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் பணியாற்றுவதை நிறுத்தப் போவதாக கூறியிருந்தார். ஆனால் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மற்றும் அமீர் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதே சமயத்தில் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனால் தான் அவர் தனது படங்களில் வலதுசாரிகளை குறிவைத்து அவர்களை எதிர்த்து பேசிவருகிறார்  எனவும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து வெற்றிமாறன் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக மற்றும் இயக்குனர் அமீர் இருவரும்  போதை பொருள் கடத்தல் பின்னணியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் வேலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறனுக்கும் இதில் தொடர்பிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.