![vijayakanth, soniya arunkumar](https://www.tnnews24air.com/storage/gallery/fisNm22tPwtIfbpWJI16mOcifgfzl4nPnV13JGai.jpg)
பெண் பத்திரிக்கையாளரான சோனியா அருண்குமார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மேலும் பெண்களுக்கு ஏதேனும் சர்ச்சை ஏற்படும் வகையிலான விவகாரங்கள் செய்திகள் வெளியில் வரும் எனில் அதனை குறித்து கண்டனங்களை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடுவார். அதுமட்டுமின்றி சில அரசியல் சார்ந்த கருத்துக்களுக்கும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவார் மேலும் அப்படி அவர் பதிவிடும் சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர் சோனியா அருண்குமார் விஜயின் ரசிகை என்பதால் விஜய் குறித்த கருத்துக்கள் வெளிவரும் பொழுதும் விஜயின் படங்கள் பாடல்கள் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் விஜய்க்கு ஆதரவாகவும் பல கருத்துக்களை முன் வைப்பார்.
இந்த நிலையில் இன்று அவர் பதிவிட்ட ஒரு பதிவு மூலம் அவரது உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது உடல் நல குறைவால் அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகளை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால் தமிழக முழுவதுமே நடிகர் விஜயகாந்தின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. பல திரை உலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பொதுமக்களின் பார்வைக்கு சென்னை தீவுதடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் தற்பொழுது அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக அவரது இறுதி ஊர்வலத்தின் போது இதற்கு முன்பாக இறந்த பெரிய தலைவர்களின் ஊர்வலத்தில் ஏற்பட்ட மக்கள் அலை இன்றும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி விஜயகாந்தின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.
இதேபோன்று பத்திரிக்கையாளர் சோனியா அருண்குமாரும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விஜயகாந்தின் மறைவிற்கு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். ஆனால் இதே சோனியாக அருண்குமார் விஜயகாந்த் உயிருடன் இருக்கும் பொழுது பல பதிவுகள் விஜயகாந்தை இழிவு செய்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வருகிறார் பிரதமர்? கருப்புக் கொடி காட்டுவேன் என விஜயகாந்த் குறிப்பிட்டதை வைத்து அதற்க்கு கமெண்ட் செய்யும் விதமாக 'உங்கள் முகத்தை காட்டினால் போதும் கேப்டன்' என்றும், நான் மூச்சு விட நேரம் தேவை என்று கேப்டன் கூறிய செய்தியை குறிப்பிட்டு விஜயகாந்த் அவர்களை 'மூச்சு முட்ட குடிச்சுபுட்டு பேச்சை பாரு' என்றும், தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து தேர்தலை சந்திக்க தயாரா? என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பிய செய்தியை குறிப்பிட்டு 'உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க தயாரா?' என்றும், 'எங்களை சீண்டாதீங்க என விஜயகாந்த் கூறியதை குறிப்பிட்டு அதற்க்கு கமெண்ட் செய்யும் விதத்தில் 'எவன்டா அவன் மிருகங்களை வதை பண்றது பீ கேர்ஃபுல் மிருகவதை சட்டம் பாயும் எனவும் விஜயகாந்த்தை அவமதித்தும் பதிவிட்டுள்ளார்.
மேலும் சில பதிவுகளில் 'விஜயகாந்தின் உருவ பொம்மை எரிப்பு - அதிமுகவினர் ஆவேசம்! என்ற செய்தியை குறிப்பிட்டு அடப்பாவிகளா எப்படி பிளான் பண்ணாலும் எரிஞ்சு போன உருவ பொம்மை தான் வரும் அவர் உருவத்துக்கு என விஜயகாந்தை உருவகேலி செய்து பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார் சோனியா அருண்குமார். ஒரு நல்ல மனிதர் உயிருடன் இருக்கும் பொழுது கேவலமாக அவரை குறித்து பதிவிட்டு அவர் இறந்த பிறகு பாராட்டி பதிவிட்டு அதுவும் குறிப்பாக விஜய் கேப்டனி்ற்கு மரியாதை செலுத்தும் புகைப்படங்களை அதிகமாக பதிவிட்டு சோனியா அருண்குமார் அனுதாபம் தேடுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.