24 special

விஜயகாந்த் பெயரை கேட்டதும் அலறிய நடிகைகள்....

vijayakanth
vijayakanth

கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் தற்பொழுது காலமாய் இருப்பது திரை உலக பிரபலங்களையும் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் என தமிழக முழுவதும் துக்கம் சூழ்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் விஜயகாந்தின் இழப்பு வாட்டியது. இந்த நிலையில் சமூக வலைத்தளம் முழுவதும் விஜயகாந்த் குறித்த பதிவுகளும் கருத்துக்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் கொடுத்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது. 1986இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியில் அவர் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், 'இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க.


பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார். முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்.ஆனா, ‘இனிக்கும் இளமை' படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, ‘அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்‘னு சொல்லுவாங்க.

அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு! அகல் விளக்கு' படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு' படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை! அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் சாட்சி ' படம் வந்தது ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘ ‘‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. ‘பார்வையின் மறுபக்கம்' படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம்.

அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை! இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க'னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் என்று கூறிய பேட்டி தற்போது வைரலாகி உள்ளது. மேலும் விஜயகாந்த் திரை பயணத்தை தொடங்கிய பொழுது அவருடன் இருந்த இப்ராஹிம் நண்பரை குறித்தும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அவரது நண்பர் இப்ராஹிம் விஜயகாந்துக்கு பல வகைகளில் உதவிகளையும் உறுதுணையாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படப்பிடிப்பு தளத்தில் விஜயகாந்த் சாப்பிட இலையில் உட்கார்ந்த சமயம் அவரை எழுப்பியதால்தான் இனி நாம் பலரின் பசியை போக்கவேண்டும் எனவும், நிறைய நடிகைகள் இவ்ளோ கருப்பா ஒரு ஆளா என ஒதுக்கியதால்தான் பின்னாளில் வெறிகொண்டு நிறைய படங்களை நடித்தார் கேப்டன் என்பதும் வரலாறு