![Sritharan](https://www.tnnews24air.com/storage/gallery/CO3hUNOe8MW0NTcgnSvfpICgTU7s5B1pUpcznIeA.jpg)
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தது சென்று கொண்டே தான் இருக்கிறது. அரசு அதிகாரிகளை கையில் கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபடுவது, அதே அரசு அதிகாரிகள் மீது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கொலை செய்வது போன்று பல சம்பவங்கள் அவ்வப்போது வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெண் அதிகாரி மீது திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஒருவர் நடத்திய சம்பவம் தான் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் ஜீவனந்தத்தின் தம்பி ஸ்ரீதரன் இவர் திருவண்ணாமலை நகரமன்றத்தின் முன்னாள் தலைவராக இருந்த இவர் தற்போது திமுகவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர்களது குடும்பம் நேற்று அண்ணாமலையார் கோவிலில் சாமி தரசினம் செய்து வந்தனர். பகதர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் பெண் இன்ஸ்பெக்டர் காந்திமதி என்பவர் இருந்து வந்தார். அப்போது பெண் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரனின் குடும்பத்தாரிடம் மற்ற பக்கதர்களுக்கு மறைக்காமல் இருங்கள் என கூறியதாக கூறப்படுகிறது. உடனே ஸ்ரீதரன் குடும்பத்தார் ஒருவர் ஸ்ரீதரனிடம் இதை கூறியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீதரன் அந்த பெண் இன்ஸ்பெக்ட்டரிடம் 'நீ எப்படி இப்படி கூறலாம் என பெண் இன்ஸ்பெக்ட்டர் காந்திமதி கன்னத்தில் பாளர் என அறைந்தார். இதில் நிலை தடுமாறி அந்த இன்ஸ்பெக்ட்டர் கீழே விழுந்தார். உடனே கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை தண்ணீர் கொடுத்து உதவி செய்த்தனர் காந்திமதி திருவண்ணாமலை டி.எஸ்.பி யிடம் தகவல் தெரிவிக்க விரைந்து கோவிலுக்கு வந்த டிஎஸ்பி உள்ளிட்ட காவலர்கள் ஸ்ரீதரனை காப்பதும் விதமாக கோவிலில் உள்ள சிசிடி ஆப் செய்ய உத்தரவிட்டும் பக்தர்கள் செல்போனில் படம் பிடித்த செல்போனை பறிமுதல் செய்வதிலும் தான் குறிக்கோளாக இருந்ததாகவும் அந்த பெண் காவலருக்கு என்ன ஆனது என கேட்காமல் இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து, டி.எஸ்.பி அந்த பெண் காவலரை இங்கு பணியில் ஈடுபட வேண்டாம் என கூறி வெளியில் அனுப்பினார். இந்த தகவல் தமிழக டிஜிபி சங்கர் திவளுக்கு தெரியவர திருவண்ணாமலை போலீசாருக்கு அறிவுறுத்தி திமுக பிரமுகர் ஸ்ரீதரன் அவரது குடும்ப உறுப்பினர்கள் கோவில் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருமவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
ஏற்கனவே, திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கொலை, கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. தற்போது பெண் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் எதற்காக பாதுகாத்து வருகிறது என கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் அந்த இன்ஸ்பெக்டருக்கு நிவாரண தொகையோ அல்லது என்ன ஆச்ச என்று யாரும் நலம் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீதரனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இல்லையென்றால், ஆட்சிக்கு எதிராக காவல்துறை திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால் திமுகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.