பொதுவாக டூல்கிட் என்ற வார்த்தையை உச்சரிக்கும் பொழுது வாகனங்களை பழுது பார்ப்பவர்கள் வைத்திருக்கும் ஒரு பெட்டி என்றும் நினைவுக்கு வரலாம் அதே சமயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் அனுபவம் உள்ளவர்களுக்கும் இந்த வார்த்தை மிகவும் பரிச்சயமாக இருக்கும் ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கான மொத்த தகவல்கள் மற்றும் விபரங்களை ஒரே வலைதளத்தில் சேமித்து வைத்திருப்பார்கள் அதற்கும் டூல்கிட் என்றும் அர்த்தமாகும். ஆனால் தற்போதைய சமூக வலைதள காலத்தில் நம் எதிர்ப்பை டூல்கிட் என்பது மூலம் வெளிக்காட்டலாம். அதாவது முன்பு துண்டு அறிக்கைகள் அளிப்பது, கூட்டம் போட்டு பேசுவது போன்ற செயல்களில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தவர்கள்! அதே போன்று தற்போது இருக்கும் நவீன காலத்தில் எக்ஸ் வலையதள பக்கத்தில் ஹேஸ் டாக்குடன் தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்பது பொது இடங்களில் ஒன்றாக கூடி கோஷம் இடுவது மின்னஞ்சல் செலுத்துவது போஸ்டர் இடுவது மேலும் சில குறிப்பிட்ட படத்தின் மூலம் அரசியலில் நிகழும் ஏதேனும் ஒரு கருத்தை மையப்படுத்தி அதற்கான எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் தெரிவிப்பது, ...மிகவும் தெளிவாக கூறப்போனால் அரசியல் பிரபலங்கள் அல்லாத மற்ற பிரபலங்கள் அரசியல் சார்ந்த கருத்துக்களை பற்றி பேசுவதும் ஒரு சில குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசும் கருத்துக்களையே டூல்க்கிட் என்று தற்போது கூறி வருகின்றனர்.
இந்த டூல்கிட்டில் நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்பு இணைந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. அதாவது நயன்தாராவின் நடிப்பில் அவரது 75வது படமான அன்னபூரணி படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்தில் பிராமண பெண்ணாக இருக்கும் நயன்தாரா இறைச்சி சாப்பிடும் பெண்ணாகவும் வலம் வந்தது பல சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்தது அதிலும் குறிப்பாக நடிகர் ஜெய் அந்த படத்தில் ராமர் வனவாசத்தின் போது இறைச்சி சாப்பிட்டார் என்று கூறியது மற்றும் பிராமண பெண்ணான நயன்தாரா நமாஸ் செய்தது போன்ற பல சீன்கள் அனைத்தும் இந்து மதத்தின் புனிதங்களுக்கு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோடு நயன்தாரா, ஜெய் மற்றும் அப்படத்தை வெளியிட்ட netflix நிறுவனத்தின் மீதும் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி அன்னபூரணி படத்தின் மூலமாக நயன்தாரா பிராமணருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தது டூல்கிட் என்றழைக்கப்பட்டது. மேலும் இதனால் எழுந்த சர்ச்சையால் ஜீ தமிழ் நிறுவனம் தற்பொழுது அன்னபூரணி படத்தை நெட்பிலிக்சில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் நயன்தாராவை தொடர்ந்து தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ்சும் டூல் கிட் வெர்ஷனில் இணைந்துள்ளார். அதாவது திமுகவின் டூல் கிட்டாக தற்பொழுது கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படத்தில் நடித்திருப்பது விரைவில் சர்ச்சை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது, ரகு தாத்தா படத்தில் டீஸர் வெளியானதை அடுத்து அந்த டீசரில் ஹிந்தி தெரியாது போடா என்ற வசனங்களை உச்சரித்தும், ஹிந்தியை தொடர்ச்சியாக எதிர்த்தும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்! இவை அனைத்தையும் திமுக கூறி குறிப்பாக உதயநிதி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு அதற்காகவே கீர்த்தி சுரேஷ் இதுபோன்று செய்கிறார் எனவும் இதனால் விரைவில் கீர்த்தி சுரேஷ்! ...சூர்யா, சித்தார்த், சத்யராஜ் போன்ற போராளிகள் பட்டியலில் இணைந்து விடுவார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது மட்டுமில்லாமல் நயன்தாராவின் தற்போதைய மார்க்கெட்டை வீழ்த்த கீர்த்தி சுரேஷை வைத்து சில வேலைகள் நடப்பதாவும் கூறப்படுகிறது. கலைஞர் 100 விழாவில் கீர்த்தி சுரேஷை மேடை ஏற்றி சீனியரான நயன்தாராவை அசிங்கப்படுத்தியது, தற்போது நயன்தாரா போலவே கீர்த்திசுரேஷை டூல்கிட்டாக பயன்படுத்துவது எல்லாமே பிரச்சாரத்துக்காகவும், நயனை வீழ்த்துவதற்காகவும்தான் எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.