24 special

செத்த வாய வச்சுக்கிட்டு சும்மா இருங்களேப்பா....! முதல்வர் பாய்ந்த பின்னணி..!

Mkstalin, udhayanidhi stalin
Mkstalin, udhayanidhi stalin

சனாதன ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் திரும்பி வருகின்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்தும் சனாதன ஒழிப்புக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதாவது சனாதனத்தை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியதற்கு இந்தியா முழுவதும் இருந்து எதிர்ப்புகள் வெடித்தது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜஸ்தானில் பொது பேரணியில் பேசும்பொழுது இதற்கு காங்கிரஸ் உடன்படுகிறதா? என்ற கேள்வியும், சனாதன ஒழிப்பிற்கு காங்கிரஸ் உடன்படுகிறது என்ற கருத்துக்களை முன்வைக்க, சனாதன தர்மம் குறித்து எங்களது பார்வை தெளிவாக உள்ளது அனைத்து மக்களும் சமம் என்பதே எங்களது கட்சியின் முக்கிய சித்தாந்தம், ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது கருத்துக்களை சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது அதில் நாங்கள் தலையிட போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது உதயநிதியின் கருத்திற்கு காங்கிரஸ் பட்டும் படாமல் பதில் சொல்லி நழுவியதாக விமர்சனங்கள் எழுந்தது. 

அதே சமயத்தில் உதயநிதியின் கருத்துக்களை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் உதயநிதியின் கருத்தை திட்டவட்டமாக எதிர்த்ததோடு உதயநிதி சனாதன ஒழிப்பு பற்றி கூறிய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அதில் நான் உடன்பட போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் இந்தியா கூட்டணியில் இருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்தும் சனாதன தர்மத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தது திமுக இந்தியா கூட்டணியில் தொடருமா என்பதற்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியது. 

இதனால் திமுக தலைமை கூட உதயநிதியின் கருத்திற்கு கோபமடைந்ததாகவும் ஆனால் அதனை வெளிக்காட்டாமல் தனது மகன் என்ற காரணத்திற்காக பொதுவெளியில் அவர் கூறிய கருத்துக்கு ஆதரவாக தெரிவிப்பது போன்று அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் கிடைத்தது. தேர்தல் கள நிலவரங்களும் தமக்கு சாதகமானதாக இல்லை என்று கிடைத்த உளவுத்துறை ரிப்போர்ட் முதல்வரை சிந்திக்க வைத்த நிலையில் உதயநிதி இப்படி சற்றும் யோசிக்காமல் பேசியது தவறாகி விட்டதே என்ற கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் உதயநிதி சனாதனம் குறித்த கருத்துக்களை இன்னும் அதிக மேடைகளில் பேசுவதாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார் அதற்கும் பாஜக தரப்பிலிருந்தும் ஏன் வட மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் கழுத்திற்கு 100 கோடி ரூபாய் விதித்ததும் அரங்கேறியது. அதற்குப் பிறகும் உதயநிதி அமைதியாகாமல் நேற்றைய தினம் மற்றுமொரு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார், அதாவது. சனாதனத்தை ஒழிக்க தான் திமுக கட்சியே ஆரம்பிக்கப்பட்டது இதற்காக ஆட்சியே போனாலும் கவலை கிடையாது! என்று கூறி திமுக தலைமைக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்தார் உதயநிதி. 

ஏற்கனவே ஆரம்பத்தில் பேசிய சனாதன ஒழிப்பு கருத்திற்கு இந்தியா கூட்டணியின் அடுத்த மாநாட்டிற்கு அழைப்பு வருமா என்று தெரியாவில்லை இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தை உதயநிதி கூறி விட்டாரே என்றும் இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து நாம் விரட்டியடிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் சனாதன ஒழிப்பு குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவை தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார் என்று மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும் தேர்தல் வரைக்கும் சனாதனம் பற்றி வாயே திறக்கக்கூடாது என வேறு முதல்வர் தரப்பில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாக வேறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்...