24 special

பெண்களுக்கு அதிர்ச்சி....! திமுக அரசு செய்யப்போகும் காரியத்தால் வெடிக்கப்போகும் பிரளயம்..!

Mkstalin,ptr palanivel thiyagarajan
Mkstalin,ptr palanivel thiyagarajan

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக எப்படியாவது வெற்றி அடைந்தே ஆக வேண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பல வாக்குறுதிகளை மக்கள் முன்பு வைத்தது. அதில் அனைத்து தமிழக மகளிராளும் கவரப்பட்ட ஒரு வாக்குறுதி ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வாக்குறுதி, அதாவது தமிழகத்தில் இருக்கும் அனைத்து மகளிருக்கு  தலா 1000 ரூபாய் மாதம் வழங்கப்படும் என்று திமுக தனது வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தது. 


இதனை நம்பி மக்களும் அவர்களுக்கு ஓட்டு போட ஆட்சி பொறுப்பை ஏற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு இது பற்றிய பேச்சை திமுக தரப்பு எடுக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.. 

அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலின் பொழுது 2023 - 24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்பொழுது அப்போதய நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் சில வரையறைகளையும் வெளியிடுவதாக அறிவித்து கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிருக்கு  இந்த பலன் சென்றடையும் என்ற ஒரு டுவிஸ்டையும் இதில் தெரிவித்தார். 

அதற்குப் பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மகளிர் உரிமைத் தொகை யார் யார் பெறுவதற்கு தகுதி உள்ளது தகுதி அல்ல என்று சில வரையறைகளை வரையறுத்தது இது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்றது. 

அறிவிப்புகள் வந்து மூன்று நான்கு மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொருவரது வங்கி கணக்குகளிலும் போடப்படும் என்று கூறப்பட்டது அதற்காக விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டு விண்ணப்ப செயல்கள் முடிக்கப்பட்டது. ஒரு சிலர் இப்படி ஏன் பிரித்துக் கொடுக்க வேண்டும் ஒரு கோடி பேருக்கு வரும் என்று கூறுகிறார்கள் ஆனால் அதுவும் வருமா என்று தெரியவில்லை என்ற அதிருப்தியும் மற்றொரு சிலர் மத்தியில் சரி இதையசும் கொடுக்கிறார்களே என்ற மனதை ஆறுதல் படுத்தியும் கொண்டனர். 

இந்த நிலையில் தமிழக அரசின் நிதிநிலை ஆலோசகராக இருக்கக்கூடிய ரகுராம் ராஜன் முதல்வரை கான்பரன்ஸ் வாயிலாகவும் நேரில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக 5 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது அந்த நிபுணர்கள் குழுவில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்ரமணியன், எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தமிழக அரசின் நிதி பங்கீடு குறித்த ஆலோசனைகளை அவ்வப்போது இந்த குழு தமிழக முதல்வருக்கு வழங்கி வருகிறது. இப்படி அடுத்த வாரத்தில் திராவிட மாடல் அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை வழங்க உள்ள நிலையில் திடீரென்று இந்த குழுவின் தலைவராக உள்ள ரகுராம் ராஜன் முதல்வரை சந்தித்தது  மகளிர் உரிமைத் தொகையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை ஆலோசிக்க தான் என்று தகவல்கள் கசிந்துள்ளது.. 

ஏற்கனவே தமிழகத்தில் நிதி நிலையில் சரியில்லை கடனில் இருக்கிறது தமிழகம், இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இப்படி ஆயிரம் ரூபாய் கொடுப்பது இயலாத காரியம் எப்படி கொடுக்க முடியும் என்று விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தமிழக முதல்வரை சந்தித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது இதனால் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமா இல்லையா என்ற சந்தேகமும் தற்போது மக்கள் மத்தியில் குறிப்பாக குடும்பத்தலைவிகள் மத்தியில் எழுந்துள்ளது.