திருச்சி விமான நிலையத்தில் 37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பெண் கடத்தி வந்த சம்பவம் விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது பெண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக அளவிற்கு அதிகமான எடை கொண்ட சானிடரி நாப்கின்களை கையில் வைத்து இருந்தது கண்டறியப்பட்டு இருந்ததுஇதையடுத்து உடனடியாக அந்த பெண் பயணியை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தியதில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்தது.
அந்த பெண் மற்றும் உடன் வந்தவர்கள் சானிடரி நாப்கினில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் பாக்கெட்களில் அடைத்து மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண் பயணியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 37 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 612 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்தப் பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழ் சினேமாவில் அயன் திரைப்படத்தில் வரும் கடத்தல் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு திட்டம் போட்டு தங்கத்தை கடத்திய பெண்ணை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.