வேலுமணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சரவணன் வேலுமணியிடம் கை கொடுக்க அலைந்த காட்சியும் அவர் கண்டுகொள்ளாமல் விரட்ட பட்ட காட்சிகள் பாஜகவில் எப்படி இருந்த சரவணன் இப்படி ஒரு நிலைக்கா வரவேண்டும் என சரவணன் அபிமாணிகள் புலம்பும் வகையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் சகோதரரும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் அன்பரசன் மகனது திருமணம் ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் கிளை கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர், மிகவும் பிரமாண்டாமாக நடைபெற்ற திருமண வரவேற்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் முன்னாள் எம் எல் ஏ சரவணன் கலந்து கொண்டார்.மணமக்களை சந்திக்க வந்த சரவணன் அருகில் நின்ற வேலுமணியிடம் கைக்கொடுக்க பல வழிகளில் முயற்சி செய்தும் முதலில் வேலுமணி கண்டுகொள்ளவில்லை, மணமக்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கூட சரவணனை 10 ஓடு பதினொன்றாக பின்னாலே நிற்க வைத்தனர்.அதிமுகவின் கிளை கழக நிர்வாகியாக இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை கூட முன்னாள் எம் எல் ஏ வாக இருந்த சரவணனுக்கு இல்லையே? பாஜகவில் மதுரையில் கம்பீரமாக செய்தியாளர் சந்திப்பு, கட்சி பணி என வலம் வந்த சரவணன் இப்படி அலையும் நிலைக்கு சென்று இருக்கிறாரே என வேதனை அடைந்து இருக்கிறார்கள் சரவணனிடம் பல கட்சிகள் மாறினாலும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கும் சரவணன் ஆதரவாளர்கள்.