தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று மாலை பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி அமர்ப்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஊடகம் காவல்துறையினருடன் சேர்ந்து நடத்திய நாடகம் அம்பலமாகி இருக்கிறது.குறிப்பிட்ட ஊடகங்கள் இதன் பின்னணியில் இருப்பதும் தெரியவந்து கண்டறியப்பட்டு இருப்பதால் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் உண்டாகி இருக்கின்றன.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே 45 அடி பாஜக கொடி கம்பம் நடப்பட்டது.
கொடி கம்பம் நடுவதற்கு மாநகராட்சியிடமும் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்பட்டது, இந்நிலையில் அந்த கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற போது போலீசாருக்கும் பாஜகவினருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.பாஜக வைத்த கொடி கம்பம் தான் உங்கள் கண்களுக்கு தெரியுமா? இங்கு திமுக தொடங்கி பல்வேறு அமைப்புகளும் கொடி கம்பம் நட்டு இருக்கிறார்கள் அவை எல்லாம் முறையாக அனுமதி பெறப்பற்று இருக்கிறதா? உங்களுக்கு பாஜக மீது மட்டும் வெறுப்பு ஏன் என பாஜக நிர்வாகிகள் அடுகடுக்காக கேள்வி எழுப்பினர்.அப்போது கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபியை பாஜகவினர் தடுத்து நிறுத்தினர், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கானாத்தூர் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, திருவல்லிக்கேனியை சேர்ந்த கன்னியப்பன், பாலமுருகன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த செந்தில் குமார், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்திர குமார், நங்கநல்லூரைச் சேர்ந்த பாலா என்கிற வினோத் குமார் ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்தான் சரியாக சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள அமர் பிரசாத் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அமரை விசாரணைக்கு ஆஜராகுமாரு அழைத்தனர்.
அவரும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க தனது வீட்டில் இருந்து காவல்துறை வாகனத்தில் ஏறி போலீஸ் நிலையம் சென்றார்.இதற்கு இடையில் தான் காவல்துறை தரப்பில் ஊடகங்கள் சிலவற்றிற்கு அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருந்ததாகவும் அவரை காவல்துறை தேடி கண்டு பிடித்ததாகவும் செய்திகள் வெளியிட்டு இருந்தன.ஆனால் அமர் எங்கும் தலைமறைவாக செல்லவில்லை சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே இருந்தார் அமரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது கூட அவரது மனைவியே வீடியோ எடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஊடகங்களும் ஆளும் கட்சியும் சேர்ந்த சிலரும் திட்டமிட்டு அமர்ப்பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருந்ததாக போலியாக செய்திகளை வெளியிட்டு வந்தது பின்னால் பெரிய திட்டமிடல் இருப்பதாகவும் அமர் மீது மேலும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரது நடவடிக்கையை முடக்குவதன் மூலமும், பாஜக மீது அழுத்தங்களை பதிவு செய்யவும் புது திட்டத்தை ஆளும் கட்சியான திமுக எடுத்து இருப்பதாகவும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சென்னை இல்லத்தில் இருந்த அமர் தலைமறைவானதாக ஊடகங்களும் துணை போனது அம்பலமாகி இருக்கிறது.