Cinema

கர்ப்ப காலத்தில் ஜாலியாக இருக்கும் மைனா!! பின்னணி வேற விஷயமாமே...

AMALA PAUL
AMALA PAUL

வெள்ளித் திரையில் ஒரு மைனாவாக நமக்கு எல்லாம் அறிமுகமான ஒரு நடிகை தான் அமலா பால். அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவர், யார் என்ன சொன்னாலும் பொதுமகனை கண்டுகொள்ளாமல் தைரியமாக பல படங்களில் நடித்த வரும் ஒரு முன்னணி நடிகையாவார். இவர் அக்டோபர் 26, 1991 கேரளாவில் உள்ள எர்ணாகுளம் என்னும் இடத்தில் பிறந்தார். தொடக்கத்தில் மலையாள படத்தில் நடித்து வந்த இவர் பின் தமிழ் மொழியில் அறிமுகமானார். ஆனால் இவர் நடித்த முதல் படம் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தில் பல சர்ச்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அதை அனைத்தையும் உடைத்தெறிந்து, அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்து வந்தார். அதன்பின் இவர் நடித்த மைனா என்னும் திரைப்படம் இவர் வாழ்க்கையில் பெரும் திருப்பும் முனையாகவே அமைந்திருந்தது. எந்த ஒரு மேக்கப்புமே இல்லாமல்  தனது இயற்கையான அழகிய நாள் இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்.


பார்ப்பதற்கே மிகவும் இயல்பான பெண்ணை போல் இருப்பதால் மக்கள் அனைவராலும் இந்த படம் பெருமலவு வரவேற்கப்பட்டது. அதன் பின் தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி??, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், பசங்க போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து பல வெற்றிகளை கொடுத்து வந்தார். அதன் பின் இவருடைய நடிப்பில் மிகவும் சிறந்த ஒன்று அம்மா கணக்கு என்னும் திரைப்படத்தில் இவருடைய நடிப்புதான். தமிழ் சினிமாக்களில் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பழமொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். தெய்வத்திருமகள் படத்தின் மூலம் அறிமுகமான ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் திருமணமான சிறிது நாட்களிலே பிரிந்து விட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று அமலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது நீண்டகால நண்பர் ஜெகத் தேசாய் என்பவர் அவரை புரபோஸ்  செய்து அமலாபால் ஏற்றுக் கொண்ட நிலையில் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களின் திருமணம்  குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார். இது அவர்களின் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது உள்ள காலங்களில் நடிகைகள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து பல திரைப்படங்களில் நடிக்கின்றனர். கர்ப்பமாக இருப்பதை வெளியே கூறினால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று நினைக்கின்றனர். ஆனால் அமலாபால் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உலகிற்கே கூறினார். தொடர்ந்து பல திரைப்பட போஸ்டர்கள், கடவுள் வழிபாடு செய்வது போன்று புகைப்படங்கள், தன் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் ஆகியவற்றை தனது instagram அக்கவுண்டில் தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வந்தார். இது குறித்து சினிமா விமர்சகர்களிடம் விசாரிக்கும்போது சினிமா வாய்ப்புகள் இல்லை, எனவே விளம்பரங்களில் கவனம் செலுத்தவேண்டும் என இதுபோன்ற விளம்பர செயல்களில்  ஈடுபடுகின்றார் எனவும் வேறு கூறுகின்றனர்...மேலும் ஏற்கனவே திருமணமானவர், இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்தவர் என்பதால் விஜய்யை கடுப்பேற்ற அமலா பால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றார் எனவும் வேறு கூறுகின்றனர் சினிமா விமர்சகர்கள்.