24 special

அடுத்தடுத்து உளறி பிரச்சனையில் சிக்கும் உதயநிதி...!

Udhayanidhi
Udhayanidhi

உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியதை காட்டிலும் நாடு முழுவதும் கடும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது, பாஜக கடுமையாக உதயநிதி கருத்தை முன் வைத்து விமர்சனம் செய்ய தொடங்கிய நிலையில் திமுக இடம்பெற்றுள்ள ஐ என் டி ஐ எ கூட்டணி கட்சி தலைவர்கள் சற்று திமுகவை அமைதி காக்க கூறி இருந்தனர்.


இந்நிலையில் நேற்று மீண்டும் உதயநிதி ஸ்டாலின் உளறிய சம்பவம் ஒட்டு மொத்த ஐ என் டி ஐ எ கனவிலும் மண்ணள்ளி போட்டு இருக்கிறது. அதிலும் உதயநிதி சீப்பு குறித்து காமெடி செய்தது தான் ஒட்டு மொத்த ஐ என் டி ஐ எ கூட்டணிகளும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

தூத்துக்குடிதலையை சீவினால் 10கோடி என்று சாமியார் கூறுகிறார் பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் போதும் நானே தலையை சீவி விடுவேன் உதயநிதி ஸ்டாலின் பேச்சுதூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி பேசியதாவது..!

இந்தியாவே என்னை பற்றி தான் பேசிக் கொண்டு  இருக்கிறது.. சனாதான ஒழிப்பு மாநாட்டில் சனாதானத்தை ஒழிக்க வேண்டும்.. எப்படி கொசு மலேரியா, டெங்கு, காலரா, கோவிட்டை ஒழிச்சோமோ அதேபோல சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் அந்த மேடையிலே நான் சொன்னேன்.  நிறைய பேருடைய வயிற்றில் இருக்கும் என்றேன்... நான் சொன்னது நடந்தது இந்தியா முழுக்க உதயநிதி பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா முழுக்க புகார் கொடுக்கப்பட்டிருக்கு. என்னை கைது செய்ய வேண்டும் என்று இன்றைக்கு ஒரு சாமியார் என்னுடைய தலைக்கு விலை வைத்திருக்கின்றார்.. உதயநிதி தலையை யார் எடுத்துட்டு வர்றார்களோ அவர்களுக்கு 10 கோடி என்று ஒரு சாமியார் சொல்கிறார்.. என் தலை மேல் உனக்கு அப்படி என்ன ஆசை நீ ஒரு சாமியார் உனக்கு எப்படி பத்து கோடி.. நீ உண்மையான சாமியாரா.. இல்ல டூப்ளிகேட் சாமியாரா.. பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி விட்டு போயிடுவேன்.. இதே போல் கலைஞரின் தலையை சீவினால் ஒரு கோடி ரூபாய் தருவேன் என்று ஒரு சாமியார் கூறினார்... 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை நானே சீவிக்க முடியாது என்றார்...கலைஞர் என உதயநிதி மேடையில் காமெடி செய்தார்.

உதயநிதி இப்படி காமெடி செய்து கொண்டு இருக்கும் வேலையில் ஒரு கடிதம் ஒன்று வந்தது..அந்த கடிதம் பாஜக கூட்டணி கட்சியிடம் இருந்து வந்து இருந்தால் கூட அரசியல் என்று எடுத்து இருக்கலாம் ஆனால் இந்த முறை வந்தது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரிடம் இருந்து, அதில்

“சனாதன தர்மத்தை பின்பற்றும் கோடான கோடி மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். சொல்ல போனால், உலகின் முக்கியமான சனாதன தர்ம கோவில்கள் தமிழகத்தில் தஞ்சையிலும், திருவரங்கத்திலும், திருவண்ணாமலையிலும், சிதம்பரத்திலும், மதுரையிலும், சுசீந்திரத்திலும், ராமேஸ்வரத்திலும் தான் உள்ளது! 

ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி இது போன்ற முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சுக்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரன் சிங் கண்டனம் தெரிவித்து கடிதமும் எழுதி இருக்கிறார்.

என்னை ஒன்றும் செய்ய முடியாது என ஒருபக்கம் உதயநிதி தமிழகத்தில் சவால் விட்டு கொண்டு இருக்கும் நிலையில் வட இந்தியாவில் உதயநிதி பேச்சு கூட்டணி கட்சியினரையே கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களே உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ள நிலையில் உதயநிதியின் பேச்சு ஐ என் டி ஐ எ கூட்டணி தலைவர்களை கண்டனம் தெரிவிக்கும் சூழலில் கொண்டு வந்து இருக்கிறது.