24 special

இணையத்தை கலக்கும் வில்லுப்பாட்டு மாதவி ரகசிய ஆசை...

VILLUPATTU MADHAVI
VILLUPATTU MADHAVI

பழந்தமிழர்கள் கலைகள் இது அதிகமாக ஆர்வம் கொண்டு வந்தனர். தமிழர்கள் பெரும்பாலும் சிலம்பம், பட்டிமன்றம், புலியாட்டம், கும்மி என பல கலைகளின் மீது பற்று கொண்டு இருந்தனர். அதிலும் சிறப்பாக வில்லுப்பாட்டு என்ற ஒன்று மக்கள் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களை கூறும் பாடலாக அமைந்திருக்கும். பொதுவான கருத்துக்களை மிகவும் அழகான பாடல் வரிகளில் எடுத்துரைப்பது இந்த வில்லுப்பாட்டு ஆகும். தென் தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைகளில் மிகவும் சிறப்பாக திகழும் கலை தான் இந்த வில்லுப்பாட்டு. இதனை பாடும் பொழுது பல இசைக்கருவிகள் இருந்தாலும், மேலே இதற்கு முதன்மையான கருவியாக உள்ளது. மேலும் இதில்  உடுக்கை, வில்லுக்குடம், தாளம், வீசுகோல், கட்டை போன்ற துணை இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது. 


முந்தய காலங்களில் எல்லாம் இது போன்ற பாரம்பரியமிக்க  கலைகள் அதிக அளவு மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது. எனவே பல ஊர்களில் நடக்கும் ஊர் திருவிழாக்களில் அதிகமாக இந்த வில்லுப்பாட்டு கச்சேரிகள் நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இன்றளவில் இந்த கலைகள் மிகவும் குறைவாகவே ஆகிவிட்டது.தமிழகத்தின் தென்காசி மாவட்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி  மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கோயில் விழாக்களில் வில்லுப்பாட்டு பாடி வருபவர் தான் மாதவி!! இன்று வைக்கப்படும் திருவிழாக்களில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே வில்லுப்பாட்டு வைக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வில்லுப்பாட்டுகள் கிடையாது என்று மாதவி கொடுத்த ஒரு பேட்டியில் கூறுகிறார். மேலும் கூகுளில் தேடிப் பார்த்தாலும் கூட மற்ற மாவட்டங்களில் வில்லுப்பாட்டு என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று கூறுகிறார்.

ஆடல், பாடல் கச்சேரி போன்றவை மற்ற மாவட்டங்களில் நடப்பது போலவே வில்லுப்பாட்டுகளும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என்றும் முன்பெல்லாம் வில்லுப்பாட்டிற்கு நிறைய நேரங்கள் கொடுப்பார்கள் என்றும் இப்போது குறுகிய நேரத்திலேயே வில்லுப்பாட்டை முடிக்க கூறுகிறார்கள் என்றும் கூறுகிறார். முன்பெல்லாம் வில்லுப்பாட்டு பாடுபவர்கள் மைக் ஏதும் இல்லாமல் பாடுவார்களாம். ஆனால் இது காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து தற்போது உள்ள டெக்னாலஜிக்கு ஏற்றார் போல் மாறியுள்ளது என்று கூறுகிறார். வில்லுப்பாட்டையும் மற்ற துறைகளே போலவே விரும்பி படிக்கும் நபர்கள் யாரும் கிடையாது என்று கூறுகிறார். ஆனாலும் சிலர் youtube போன்ற இணைய தளங்களில் நான் பாடும் பாடலை கேட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர் அதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். வில்லுப்பாட்டு இப்போது இருக்கும் நிலையை விட இன்னும் வளர்ச்சியாக மீண்டும் மேலும் பல இடங்களிலும் வில்லுப்பாட்டு இருக்க வேண்டும் என்றும் அவருடைய ஆசையை கூறியுள்ளார். 

ஆனாலும் சிலர் இணையங்களில் வில்லுப்பாட்டுகளை பார்க்கும் பொழுது தப்பான கமண்டுகளையும் பதிவிடுகின்றனர் இதை பார்க்கும் பொழுது சிறிது கஷ்டமாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளார். வில்லுப்பாட்டு பாடுவதற்கு ஆண் தான் பட வேண்டும் பெண் தான் பாட வேண்டும் இன்று வேறுபாடு கிடையாது யார் வேண்டுமானாலும் ஆர்வம் இருந்தால் பாடலாம். எப்படி இன்ஜினியர், டாக்டர் போன்ற துறைகளுக்கு பெண்களை அனுப்புகிறீர்களோ அதேபோல இந்த துறைக்கும் அவர்களை தைரியமாக அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.பல துறைகள் இப்போது பலவிதமாக உருமாறிக் கொண்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் பாரம்பரியமான துறைகளில் பெரும்பாலான துறைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது. பல இடங்களில் தற்போது தமிழ் கலாச்சாரத்தை அழிந்து விடக் கூடாது என  இலவசமாகவே சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பொதுத்துறையில் உள்ள பெரும்பாலானோர்  அரசும் இதற்கு ஒரு நல்ல நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.