வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா என்ற பெயரில் காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சிகளும் என் டி ஏ என்ற பெயரில் ஆளும் பாஜக கூட்டணி கட்சியும் போட்டியிட உள்ளனர். மேலும் இந்தியா கூட்டணி மற்றும் என் டி ஏ கூட்டணியில் அல்லாமல் சில கட்சிகள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விருக்கின்றன.
அவைகளில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் கே.சி.ஆர் கட்சியும் பி ஆர் எஸ் என்று அழைக்கப்படும் பாரத ராஷ்ட்ரிய சமிதியும் ஒன்றாகும் மேலும் தெலுங்கானா முதலமைச்சர் கே சி ஆர் சில தினங்களுக்கு முன்பு நாங்கள் எந்த கட்சியிலும் இல்லை ஆனால் தனியாகவும் இல்லை எங்களுக்கென நண்பர்கள் இருக்கிறார்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் கே சி ஆரின் மகள் கவிதா சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து பேசியது தெலுங்கானா அரசியலில் காங்கிரஸ் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கே சி ஆரின் மகள் கவிதா அவ்வப்போது அரசியலில் ஈடுபாடாக தனது கருத்துக்களை தெரிவிப்பார் அதேபோல் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவரில் ஒருவர். இவர் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியையும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்
கே சி ஆர் மகள் கவிதா தெலுங்கானாவில் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது” ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா பாதயாத்திரை பாதயாத்திரை அல்ல அது ஆயிரம் எலிகளை கொன்ற பூனை “ என்று விமர்சித்து பேசியது தற்போது காங்கிரஸ் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது மட்டுமில்லாமல் சுதந்திரம் பெற்று காங்கிரஸ் தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்து 62 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்று விமர்சித்த பேசிய கவிதா இஸ்லாமியருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள்? வறுமையை ஒழிப்பதற்கு என்ன செய்தீர்கள்? மேலும் உங்கள் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்படவில்லை மாறாக ஏழைகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது என காங்கிரசை நோக்கி பல சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியால் தெலுங்கானாவிற்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கே சி ஆர் மகள் கவிதா கூறியதோடு கேசிஆர் ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் தெலுங்கானாவில் எந்தவித வன்முறையும் இல்லாமல் அனைவரும் சம வளர்ச்சி அடைந்துள்ளனர் என கே சி ஆர் ஆட்சியை புகழ்ந்து பேசினார் மேலும் தெலுங்கானாவில் சட்டமன்ற தலைவராக இருக்கும் கவிதா வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை சிந்தித்து செயல்படுங்கள் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்
இவ்வாறு கே சி ஆர் மகள் கவிதா ராகுல் காந்தி மேற்கொண்ட பாதயாத்திரையை ஆயிரம் எலிகளைக் கொன்ற பூனை யாத்திரை என்று கிண்டல் அடித்து பேசியதோடு காங்கிரஸ் கட்சியையும் விட்டு வைக்காமல் விளாசியுள்ளார் மேலும் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பாஜகவிற்காவது சந்திரபாபு நாயுடு பவன் கல்யாண் போன்றோர் துணையாக இருக்கும் நிலையில் காங்கிரசிற்கு யாருமே ஆதரவாக இல்லாத காரணத்தினால் தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தெலுங்கானா ஆந்திரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.