தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் பதவி ஏற்ற பிறகு ராமநாதபுரத்திற்கு முதல் முறையாக செல்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது, அதாவது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் தனது நடை பயணத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக மக்களின் வரவேற்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதே போல் வரவேற்பு கிடைக்க வேண்டும் என திமுக கட்சியினர் போராடி வருகின்றனர் என்றும் அதன் காரணமாகத்தான் இதுவரை ராமநாதபுரத்திற்கு வராத முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்பொழுது ராமநாதபுரத்தில் தென் மண்டல மாவட்டங்களின் பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் மீனவ சங்க மாநாடு ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார் எனவும் கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தென் மண்டல மாவட்டங்களின் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வழி முழுவதும் சிறப்பு வரவேற்பு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு சென்று தென்மண்டல பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிறகு இந்த கூட்டத்தில் தென் மண்டலங்களை சார்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு ஆகியவற்றை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கவனித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராமேஸ்வரத்தில் நடைபெறும் மீனவ சங்கம் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கலந்துகொள்ள செல்லும்போது வழிநெடுக அண்ணாமலையின் விளம்பரங்கள் அண்ணாமலையின் பேனர்கள் மற்றும் பாதயாத்திரையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வசனங்கள் ஆகியவை இருந்ததையும் தமிழக முதல்வர் கவனித்துள்ளார் இவ்வாறு ராமநாதபுரம் செல்லும் வழியெல்லாம் அண்ணாமலையின் நடைப்பயணம் பேசுபொருளாகியுள்ளதை கவனித்த முதல்வர் திமுக தொண்டர்கள் சோர்ந்து போய் இருப்பதையும் நோட்டமிட்டுள்ளார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அண்ணாமலைக்கு ராமநாதபுரத்தில் கிடைத்த மக்களின் வரவேற்பை பேனர்கள் போஸ்டர்கள் மூலம் அறிந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் மேலும் கட்சியின் பலத்தை மேம்படுத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்ததும் அண்ணாமலையின் நடைபயணம் ராமநாதபுரம் மட்டுமல்லாது அவர் செல்லும் வழி எல்லாம் திருப்பத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதும், இது தெரிந்துதான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதனால் அங்கிருந்தபடி திமுக அறிவாலயத்தை அழைத்து சில மூத்த தலைவர்களிடம் பேசியதாக தகவல்கள் தெரிகிறது அதாவது நாம் நிலைப்பது போல் களம் மாறிவிட்டது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதால் திமுக தலைமை திமுகவினரை அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இவ்வாறு இராமநாதபுரத்தில் தமிழக பாஜக தலைவரின் நடை பயணத்தில் கூடிய மக்கள் கூட்டத்தை விட அதிகமாக கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்தது வீணாகிப் போனதால் வருத்தத்தில் முதல்வர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததுடன் மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு மேலும் திமுக பல முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.