24 special

ஜெயில்லையே இல்லையா செந்தில் பாலாஜி...? இது என்ன புதுசா இருக்கு..?

senthil balaji
senthil balaji

தற்போதைய திமுக ஆட்சியில் பெரிதும் கவலைக்கிடமாக இருக்கும் அமைச்சர் யார் என்றால் செந்தில் பாலாஜி தான்! முதலில் வருமானவரித்துறை சோதனை, பிறகு அமலாக்கத்துறை சோதனை, இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்துமே செந்தில் பாலாஜியின் குற்றத்தை விளக்கக் கூடிய ஆவணங்கள் கைது செய்யும் பொழுது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றம் சென்று இரண்டு மூன்று கட்டங்களாக வாதாடப்பட்டு கடைசியாக அமலாக்கத்துறை தரப்பிற்கு தீர்ப்பு சாதகமாக வர நீதிமன்ற காவலில் இருந்து செந்தில் பாலாஜி  புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 


பிறகும் நீதிமன்றங்களில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி காவலில் எழுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.  அந்த விசாரணையில் கிட்டத்தட்ட ஒன்றல்ல இரண்டல்ல 3000 பக்க குற்ற பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது இதுவே போதும் இதற்கு மேல் செந்தில் பாலாஜி அவ்வளவுதான் என்று மூத்த வழக்கறிஞர்கள் பேசி வருகின்றன சமயத்தில், இன்னும் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலிலே இருந்து வருகிறார். 

இதற்கிடையில் செந்தில் பாலாஜி மீது இருக்கும் குற்றங்களை நிரூபிப்பதற்காக அவரது சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி ஆகிய இருவருக்கும் சம்மனை அனுப்பி விசாரணை மேற்கொள்ள முனைப்பு காட்டியது அமலாக்கத்துறை. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குகளில் அவர் இருக்கும் பொழுது அவரது பதவி பறிக்கப்படாமல் இலக்கா இல்லாத அமைச்சராக தொடர்வது தொடர்பான விவகாரம் தமிழக அரசிற்கும் தமிழக ஆளுநருக்கு இடையில் பெரும் சர்ச்சையாக மாறியது. இருப்பினும் தமிழக முதல்வர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வார் என்று கூறியதற்கு குற்றங்கள் புரிந்தாலும் நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்தாலும் ஏன் சிறைக்குச் சென்றாலும் செந்தில்பாலாஜியே அமைச்சராக தொடர்வார் என்ற முதல்வரின் போக்கு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு தெரிவித்துள்ள போதிலும் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி செய்த குற்றங்களை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை அடுத்து சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் வருமானவரித்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை இட்டபொழுது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் அமலாக்க துறையிடம் ஒப்படைத்துள்ளது இப்படி செந்தில் பாலாஜி மீது உள்ள பிடி இறுகிக் கொண்டிருக்கும் சமயத்தில்  அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டு மறுபடியும் அவரை சிறையில் அடைத்துள்ளது. 

ஆனால் செந்தில் பாலாஜி வழக்கமாக அழைத்துச் செல்லப்படும் செல்லிற்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் எங்கு இருக்கிறார் எந்த செல்லில் இருக்கிறார், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவருக்கென தனி அறை என அனைத்தும் புது பொருட்கள், அவருக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் அவரது விருப்பத்திற்கு ஏற்ற வகைகள் மற்றும் கைதிகள் பார்க்கும் மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது செந்தில் பாலாஜி எந்த செல்லிற்கு அப்புறம் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியிடாமல் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இந்தமுறை செந்தில்பாலாஜி எந்த செல்லில் இருக்கிறார், அவரை யார் பாதுகாக்கிறார்கள் என்ற தகவல்கள் ஏன் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. 

மேலும் இவை எல்லாம் பாதுகாப்பு கருதிதான் என்றும் கடந்த முறை செந்தில்பாலாஜி தின்ற கேசரி வரை வெளியில் வந்தது இந்த முறை அப்படி நடக்காமல் இருக்கவேண்டும் என இந்த ஏற்பாடு என்றும் சில வட்டாரங்கள் கூறுகின்றன.