24 special

திருமாவளவனுக்கு தொடந்து ஏற்படும் அவமானம்...!இனியும் இந்த கூட்டணி தேவைதானா...?

Thirumavalavan,mk stalin
Thirumavalavan,mk stalin

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாசத்துடன் திருமாவளவனை தாய் சிறுத்தைகள் என்று அன்போடு அழைப்பார்கள், ஆனால் அதே விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தற்போது வேதனையுடன் தாய் சிறுத்தையே இனியும் நமக்கு திமுக கூட்டணி தேவை தானா இப்படி மதிப்பை இழந்து கூட்டணியில் இருக்க என்ன காரணம் என அலறிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.


மதுரை திருமங்கலம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி அகற்றப்பட்டதோடு நில்லாமல் கட்சி கொடி வைக்கப்பட்ட கம்பத்தின் தூணை ஜேசிபி இயந்திரம் கொண்டு ஜல்லி ஜல்லியாக நொறுக்கியது விசிகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஆளும் பாஜகவிடம் பல பட்டியல் சமுதாய கட்சிகள் கூட்டணியில் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் இப்படித்தான் கூட்டணி கட்சியை நடத்துகிறார்களா? சரி சட்டத்தை மீறி கொடி கம்பம் நடப்பட்டது என்றால் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியாதா?  அன்று அப்படித்தான் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்க வருகை தரும்போது கூட்டணி கட்சி தலைவர் என்ற மதிப்பு கூட இல்லாமல் கூட்டதோடு கூட்டமாக  திருமாவளவனை நிற்க வைத்தார்கள்.

வட மாவட்டங்களில் கட்சி கொடியை பிடுங்கிய போது அமைதியாக இருந்தீர்கள் தற்போது தென் மாவட்டத்திலும் தொடங்கி விட்டது இனியும் திமுக கூட்டணியில் நீடித்தால் கூடுதலாக ஒரு சீட் கிடைக்குமே தவிர மாறாக  விசிக கட்சி இருக்காது என சமூக வலைத்தளங்களில் புலம்பியுள்ளனர் விசிகவினர்.

ஏற்கனவே திருமண நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற போது அருகில் உதயநிதி வர உடனே ஆ ராசா திருமாவளவனை வேகமாக வழி அனுப்பி வைத்தது பலத்த சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் கூட்டணி கட்சியான விசிக கொடி பிடுங்க பட்டதோடு நில்லாமல் அவர்களை கைது செய்தும் மேலும் கொடி கம்பத்தை ஜல்லி ஜல்லியாக நொறுக்கியது.

திருமாவளவனின் பாஜக எதிர்ப்பு திமுக ஆதரவு என்ற கனவை ஜல்லி ஜல்லியாக நொறுக்கி இருக்கிறது. முதலில் தமிழகத்தில் கொடி கம்பத்தை காப்பாற்றும் வழியை பாருங்கள் திருமா, பிறகு மோடியை எதிர்ப்பதை பார்க்கலாம் என பலரும் தற்போது தாய் சிறுத்தைக்கு அறிவுரை வழங்க தொடங்கி இருக்கின்றனர்.மதுரை திருமங்களத்தில் நடந்த சம்பவத்திற்கு திருமா வாய் திறப்பாரா இல்லை தோழமை சுட்டுதலோடு நிறுத்தி கொள்வாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.