24 special

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டை அடித்து உடைக்க அமைச்சர் கே.என்.நேருவிக்கு தைரியம் இருக்கா? - திருச்சி சூர்யா

Suriya , kn nehru
Suriya , kn nehru

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கே.என்.நேருவை புறக்கணித்து நேரடியாக அரசியல் செய்கிறார், முடிந்தால் அவர் வீட்டை சேதப்படுத்த உங்களுக்கு தைரியம் உள்ளதா என்று திமுகவின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த திருச்சி சூர்யா.


அமைச்சர் திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டது குறித்து தனியார் ஊடக நேர்கானலில் திருச்சி சூர்யா பேசியதாவது: ‘தமிழ அரசின்   நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம், திருச்சி எஸ்பிஐ காலனியில் வசிக்கும்  மக்கள் நீண்ட நாட்களாக பேட்மிண்டன் அரங்கம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு என் அப்பாவும் நன்கொடை தருவதாக கூறினார். ஆனால் அப்பா கொடுக்கும் பணத்தை வைத்து பேட்மிண்டன் அரங்கம் கட்டினால் அதற்கு அவர் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற காரணத்தால் மாநகராட்சி மறுத்திவிட்டதாக கூறினார்.

அதைதொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குழுவாக நன்கொடை பெற்று, திருச்சி எஸ்பிஐ காலனியில் பேட்மிண்டன் அரங்கத்தை கட்டினார்கள். இது அரசாங்கத்தின் நிலம் என்பதால்,இந்நிகழ்ச்சியை திறந்து வைக்க அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் மேயர் போன்ற அதிகாரிகள் வருகை புரிந்ததாக கூறினார். மேலும் கடந்த 10 வருடங்களாகவே, அரசாங்க நிகழ்ச்சிகளிலும், கட்சி பொதுக்கூட்டங்களிலும் என்னுடைய அப்பாவின் பெயரை  கே.என்.நேரு எங்குமே பயன்படுத்தியது கிடையாது என்றும் குற்றம்சாட்டினார்.

அப்பாவிற்கு வருத்தை ஏற்படுத்தியது என்னவென்றால், இது நான் குடியிருக்கும் பகுதி, அங்குள்ள மக்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். நான் எவ்வளவு பெரிய அரசியல் பாரம்பரியத்தில் பயணித்து கொண்டிருக்கிறன். 30 வருடம் எம்பியாக இருந்து வருகிறேன். 50 வருடமாக அரசியல் பயணம், திமுக கட்சியில் பயணிக்கிறேன். நான் குடியிருக்கும் பகுதியிலேயே என்னுடை தலைமையில் உருவாக்கியதை, நீங்கள் அரசாங்கத்தின் மூலம் திறக்க வரும் போது என்னுடைய பெயரை குறிப்பிடாமல் இருப்பது என்ன நாயம் என்று அவருடைய அப்பா கருதியதாக திருச்சி சூர்யா கூறனார்.

என்னுடைய அப்பா ஒரு வார்த்தயை அடிக்கடி கூறுவார். கே.என்.நேருவை பற்றி திருச்சி மக்களுக்களிடம் கூறினால், அவர் யார் என்று திருச்சி மக்கள் கேட்பார்கள். ஆனால் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களுக்கு திருச்சி சிவா என்றால் தெரியும். அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடியிடம், கே.என்.நேருவை பற்றி கூறினால், யாரு ஜவஹர்லால் நேருவா என்று தான் பிரதமர் மோடி கேட்பார். ஆனால் திருச்சி சிவா என்றால் அவருக்கு நன்கு தெரியும் என்று அவர் கூரியதாக தெரிவித்தார்.

பேட்மிண்டன் அரங்கம் திருப்பு விழாவில் என்னுடைய அப்பாவின் பெயரை குறிப்பிடாமல் நடைபெற்ற நிகழ்ச்சியை கண்டித்து அவரின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கே.என்.நேரு மற்றும் அவரின் ஆதரவாளர்கள், என்னுடைய அப்பாவின் வீடு மற்றும் கார் கண்ணாடி போன்றவற்றை உருட்டு கட்டைகளை வைத்துகொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். 

மேலும், காவல்துறை முன்பே திமுக எம்எல்ஏக்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வீட்டை சேதப்படுத்துகின்றனர். ஸ்ரீரங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, காவல் துறை உதவி ஆய்வாளரை தள்ளி விட்டு முதலில் கேட்டை திறந்து தாக்குகிறார். நான் கே.என். நேருவை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறன். “உதயநிதி ஸ்டாலின் நிழலாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேருவை புறக்கணித்து நேரடியாக அரசியல் செய்கிறார். முடிந்தால் அவருடைய வீட்டை, இதே ஆதரவாளர்களை வைத்து சேதப்படுத்த உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து என்னுடைய அப்பாவின் உதவியாளர் சூர்யகுமார் என்பர் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றார். அதையறிந்து வந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் புகார் கொடுக்க வந்த நபர்களை கடுமையாக காவல் அதிகாரிகள் முன்பே வைத்து அடிக்கிறார்கள். அதை தடுக்கும் பெண் காவலர் ஒருவருரை அவர்கள் கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

அதில் பெண் காவலர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளே, திமுகவினரை தடுக்காமல், வேடிக்கை பார்த்துகொண்டு வழி அனுப்பி வைக்கிறார்கள். இதைவிட  சட்டம் ஒழுங்கு சீர்கேடு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கனுமா என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.