டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடுகளை கண்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை கைது செய்து சிபிஐ விசாரனை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் அவர்கள் செய்த ஊழல் பற்றி, டெல்லி பொதுமக்களிடம் பாஜக சார்பில் நோட்டீஸ் மற்றும் விழிப்புனர்வு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லியில் நடைபெற்ற கலால் வரி முறைகேட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்தும், டெல்லி சட்டசபையின் எதிர்கட்சி தலைவர் ராம்வீர் சிங் பிதுரி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய போராட்டம் மற்றும் கண்டன நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள அனைத்து பாஜக தலைவர்களும், அந்தந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு பொதுமக்கள் வீட்டிலும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஏற்படுத்திய கலால் வரி கொள்கை முறைகேட்டை எடுத்துறைக்க வேண்டும். மேலும் அந்த ஊழல் பற்றி நோட்டிஸ் மூலம் தெரியபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 17-ஆம் தேதி பாஜக எதிர்கட்சிகள் டெல்லியின் முக்கிய இடமாக பார்க்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே போராட்டம் நடத்தவும், மார்ச் 18-இல் முக்கிய சந்தை பகுதிகளிலும், மார்ச் 19 மற்றும் மார்ச் 20 ஆகிய தேதிகளில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராக பாஜக வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.
அதேசமயம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்விடம் மார்ச் 21-ஆம் தேதி ஜந்தர் மந்தில் மாபெரும் போராட்டம் நடத்தவும், அதைதொடர்ந்து டெல்லி சட்டசபையில் மார்ச் 23-ஆம் தேதி மதுக்கொள்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பவும் பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், மார்ச் 25-ஆம் தேதி ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய டெல்லி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வீடுகள் அல்லது அலுவலகத்திற்கு எதிரே அவர்களுடைய உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.