
இன்றைய காலங்களில் சுயநலம் என்பது தலைவிரித்து ஆடுவதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்துக் கொண்டு வருகிறோம். தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், தங்களின் குடும்பங்கள் மட்டும் எல்லா வசதிகளையும் பெறவேண்டும் என்று மற்றவர்களை பற்றி எந்த ஒரு கவலையும் படாமல் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பவர்களும் இந்த உலகில் உள்ளனர், மேலும் எல்லா வளங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் இருப்பவர்களும் உள்ளனர். இவ்வாறு அனைவரும் இந்த உலகத்தில் சுயநலமாக ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் யாராவது ஒருவர் அனைவருக்கும் உதவி செய்து கொண்டு, நான் சம்பாதிக்கும் சம்பளத்தில் தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கென எல்லாத்தையும் செய்து அவர்களை மகிழ்ச்சி படுத்தும் மனிதன் யாராவது இருந்தால் இந்த உலகத்தில் நடக்கும் பெரிய அதிசயமாகவே அவரை எல்லோரும் பார்ப்பார்கள்.
தனது சம்பளம் குறைவாகவே இருந்தாலும் அதனை சேமித்து மக்களின் கஷ்டங்கள் அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுக்கும் ஒரு மனிதன் இந்த காலத்திலும் இருக்கின்றார் என்று நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் தான் உள்ளது!! அது யார் என்று உங்களுக்கு தெரியுமா???அது நம் கே.பி.ஒய் பாலா தான்!!! இவர் தனது சம்பளத்தில் சேமிப்புகள் சேர்த்து வைத்து அதன் மூலம் பலருக்கு உதவி வரும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே உள்ளது. நாமும் இவர் செய்த உதவிகளை பல சோசியல் மீடியாக்களின் மூலம் அறிந்திருப்போம். சமீபத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது போன்ற பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார். மேலும் கடைசியாக நடக்க இயலாத ஒருவருக்கு மோட்டார் வாகனம் வாங்கி கொடுத்தார் இது போன்று பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வந்த இவர் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வந்தார்.
இதைத் தொடர்ந்து சிறிது காலத்திற்கு முன்னால் ஒரு தனியார் youtube சேனலில், youtuber ஒருவர் ஒரு பெட்ரோல் பங்க் பெட்ரோல் போட செல்லும்போது அவர் வைத்திருக்கும் கேமராவை பார்த்து அந்த பெட்ரோல் போடுபவர் இந்த கேமரா எவ்வளவு என்று கேட்டிருப்பார்..அதற்கு அந்த youtube அந்த கேமராவின் விலையை கூறியவுடன் "ஒரு சைக்கிள் கூட என்கிட்ட இல்ல, வண்டி எடுக்கணும்னு வீட்ல காசு கேட்டா செருப்பால அடிப்பேன் அப்படின்னு எங்க வீட்ல சொல்றாங்க " என்று சிரித்துக் கொண்டே தன் கவலையை கூறியுள்ளார் அந்த பெட்ரோல் போடுபவர். இந்த வீடியோவை பார்த்துவிட்டு கே பி ஒய் பாலா புதிய இருசக்கர வாகனத்தினை வாங்கி அதற்கு மாலை அணிவித்ததோடு அந்தப் பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் போடுபவர் போல போயி பெட்ரோல் போடுகின்றார். இந்த வீடியோவை கூறியிருந்த நபரும் இவருக்கு பெட்ரோலினை ஊத்துகின்றார். இவர் கே பி ஒய் பாலா என்று தெரியாமல் வேலை செய்பவரும் இயல்பாகவே இருக்கிறார். பின் பெட்ரோல் நிரம்பிய உடன் பாலா அந்த வாகனத்தின் சாவினை அந்த இளைஞனிடம் கொடுக்கின்றார்.
ஒன்றும் புரியாமல் அதனை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் யார் என்று பார்க்கின்றார். உடனே பாலாவும் தனது முகமூடி ஹெல்மெட் போன்றவற்றை கழட்டிவிட்டு அந்த சாவியினை அவரிடம் கொடுக்கின்றார். உடனே அந்த நபருக்கு மகிழ்ச்சி தாங்காமல் பாலாவினை கட்டி அணைத்து நன்றி தெரிவிக்கின்றார்!! இப்படி பாலா பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த இளைஞனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, மறுபுறம் இதெல்லாம் சும்மா இல்லையே, ஒருவேளை விஜய் ஆரம்பிக்கப்போகும் கட்சியில் பெரிய பதவியில் அமர இது ஒரு ஏற்பாடாக இருக்குமோ எனவும் இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது...