24 special

திமுகவால் கமல் சந்திக்கும் விளைவு... மய்யத்தில் முளைத்த புது பிரச்சனை..!

Stalin, Kamalhassan
Stalin, Kamalhassan

நடிகர் கமல்ஹாசன் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது எதிர்கட்சிகளிடையே  விமர்சனமாக பேசப்பட்டது. கமலின் இந்த முடிவை இன்றும் எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மையத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் இதனை இன்னும் மறக்கவில்லையாம். கமலின் இந்த முடிவுக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 


சினிமாவில் நடிகராக வலம் வந்த கமல்ஹாசன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறியதால் சினிமாவை போல அரசியலிலும் தான் போட்டியாக இருக்கவேண்டும் என்று எண்ணிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கினார். முதன் முதலாக டிவியை உடைத்து பேசிய வசனம் எல்லாம் சினிமாவை போல சில்லறை சிதறவிடும் காட்சிகள் போன்று அமைந்தது. இதனால் அரசியலில் இரு கட்சிகளை ஓடவிடும் ஒருவர் கமல்ஹாசன் உருவாக்கியுள்ளார் என்று மக்களால் பேசப்பட்டது. ஆனால் அடுத்த தேர்தலிலே திமுகவுடன் கைகோர்த்தால் கமல் மீது மக்கள் நம்பிக்கையை இழந்தனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் நேரடி கூட்டணி என்றில்லாமல் காங்கிரஸுடன் இணைந்து ஒரு தொகுதிகளில் போட்டியிடுவோம் இதனால் தமது கட்சிகளும் வளர்ச்சி பெரும் என்று எண்ணிய கமல் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போதும் நேரடியாக கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் கமல். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைமை திமுகவிடம் 10 தொகுதிகளை கேட்ட காங்கிரஸ் ஒரு தொகுதி கூட கமல்ஹாசனுக்கு ஒதுக்கவில்லை.

இதனால் திமுக கூட்டணியில் இணைந்து மக்கள் நிதி மய்யம் ஒரு தொகுதியை பெரும் என்று எதிர்பார்த்த நிலையில், கமலுக்கு திமுக ஒரு சீட் கொடுக்க முன்வந்ததாகவும் அதுவும், திமுக சின்னத்தில் தான் போட்டியிடவேண்டும் என்று கட்டளை இட்டதால் கமல் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அதிமுக பக்கம் கமல் இணைந்து செயல்படுவார் என தகவல் வந்தது. ஆனால், மறுப்பு தெரிவித்த கமல் திமுகவிடம் உள்ள ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிக்கொண்டார். மேலும் 40 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சூறாவளி பயணம் மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார். இது நிர்வாகிகளுக்கு கசப்பு தன்மையை ஏற்படுத்தியது.

கமலின் வார்த்தையை கேட்ட மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை தொடபு கொண்டாடு இந்த தேதியில் கமல்ஹாசன் உங்கள் பகுதிக்கு வருவார் நிர்வாகிகளை அழைத்து முறையான வசதிகளை ஏற்படுத்துங்கள் என்று கூற இதற்கு அவர்களோ நிர்வாகிகள் யாரும் இல்லை யாரும் வரமாட்டார்கள் என்று கூறி ஒதுங்குகிறாராம். மய்யத்தின் ஆட்கள் ஒதுங்குவதால், என்ன செய்வது என புரியாமல், தன்னுடைய தேர்தல் டூர் ப்ரோகிராமை திமுகவிடமே ஒப்படைத்து விடலாமா? என்று கமல் யோசித்து வருகிறாராம்.

மய்யத்தின் நிர்வாகிகள் ஒதுங்க காரணம் திமுகவில் இருந்து ஒத்த ராஜ்யசபா சீட் தனது லாபத்திற்காக வாங்கியதால் நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளார்களாம். கட்சியை அடமானம் வைத்து கொண்டு நிர்வாகிகளின் உழைப்பை வாங்குவது எந்த விதத்தில் நியாயம் என்று புலம்பி வருகின்றனர். இதனால் திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.