24 special

கொளுத்திப்போட்ட சரண்யா... சிக்கிய சின்னவர்...

UDHAYANITHI, SARANYA
UDHAYANITHI, SARANYA

அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக இருந்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் இந்த படத்தில் இவரை பார்ப்பதற்கு கூட்டம் குவிந்ததோ இல்லையோ நடிகர் சந்தானத்தை பார்ப்பதற்கு ஏராளமாக குவிந்தது. தொடர்ந்து வரிசையாக படங்களின் அடிக்க ஆரம்பித்த பொழுது இவர்கள் சினிமாவில் முகத்தை பிரபலப்படுத்தி பிறகு அரசியலில் நுழைவதற்கு காய்களை நகர்த்துகிறார்கள் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அரசியலில் நான் நுழையப் போவதே இல்லை என்ற கருத்துக்களை  உதயநிதி முன்வைத்து வந்தார்.  மேலும் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினும் எங்கள் அரசியல் வாரிசு அரசியல் கிடையாது என்ற வகையில் பல கருத்துக்களை முன்வைத்து வந்தார். 


இதற்கு அரசியல் விமர்சகர்கள் பலரும் பல விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர் ஏனென்றால் தற்போது உதயநிதி இளைஞரணி தலைவராக பொறுப்பேற்கப்பட்டுள்ளார் இது இவரது தந்தை வகித்து வந்த பதவி முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த பிறகு அந்த இடத்திற்கு மு க ஸ்டாலின் சென்றார், மு க ஸ்டாலின் இருந்த இடத்திற்கு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சென்று உள்ளார் இப்படி தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக குடும்ப அரசியலை மேற்கொண்டு வருகிறார்கள் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.  மேலும் சினிமாவில் இருக்கும் பொழுது அரசியலில் வரப்போவதில்லை என்று கூறினீர்களே என பல எதிர்ப்புகளையும் உதயநிதி பெற்றார். அந்த எதிர்ப்புகளோடே திமுகவின் முக்கிய தொகுதியாக மற்றும் அதிக செல்வாக்கை திமுக கொண்டுள்ள தொகுதியாக கருதப்படுகின்ற சேப்பாக்கம் தொகுதியில் நின்று அமைச்சராகி தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

மேலும் உதயநிதி தமிழகத்தின் துணை முதல்வர் போன்றும் திமுகவின் அடுத்த தலைவர் போன்றும் செயல்பட்டு வருவது அரசியல் வட்டாரம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி குறித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது அதில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் உதயநிதிக்கு அம்மாவாக நடித்திருந்த சரண்யா உதயநிதி குறித்து,. ஒரு கதை ஒன்றை கூறியுள்ளார். அதாவது இது உதயநிதியின் கதை ஒரு குழந்தை பிறக்கிறது அந்த குழந்தை பிறந்தவுடன் அதனுடைய உடல் முழுவதும் நீல கலர் படர்ந்துள்ளது என்ன இது கிருஷ்ணரை போன்று உடல் முழுவதும் நீல கலர் உள்ளது என்று பலரும் ஆச்சரியமாக பார்த்து இதில் ஏதேனும் அலர்ஜியால் வந்திருக்குமோ என்று அதிர்ச்சியும் அடைந்தனர் இந்த நீல கலர் அந்த குழந்தையின் உடலில் இருந்து போக வேண்டும் என்றால் குழந்தையின் உடல் முழுவதும் பிராந்தியை தேய்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர், அதனால் அந்த குழந்தையின் உடல் முழுவதும் பிராந்தி தேய்க்கப்பட்டுள்ளது. எனவே உதயநிதி இனி உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று பலர் கேட்கும்பொழுது நான் பிராந்தியில் குளித்தவன் என்று நீங்கள் கூறலாம் என மேடையில் பேசி உள்ளார்!! இது பழைய வீடீயோவாக இருந்தாலும் தற்பொழுது மிகவும் வைரலாக இணையத்தில் உலா வருகிறது...இதற்கு நெடிசன்கள் பலரும் பல கேலி கிண்டல்களையும் அதிரடியான விமர்சன கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்