24 special

இனி கே.எஸ்.அழகிரி இல்லை ரேஷன் கார்டு அழகிரி, சிக்கிய காங்கிரஸ் தலைவர் !

As alagiri
As alagiri

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் தற்போது கடும் சிக்கலில் சிக்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.


கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்றும் அதன்படி ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்று காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.ஒரு குடும்பத்தில் இரண்டாவது நம்பர் போட்டியிட கட்சியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு பொறுப்பை வகிக்க கூடாது எனவும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிப் பொறுப்புகளில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு 50% வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் ஊடகத்தில் அழகிரியிடம் நெறியாளர் அசோகா கேள்வி ஒன்றை எழுப்பினார் அதாவது ஒரு குடும்பத்தில் கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் பா.சிதம்பரம் குறித்தும் கார்த்தி சிதம்பரம் குறித்தும் கேள்வி கேட்டார் அதற்கு அழகிரி கொடுத்த பதில் கடும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

அதாவது சிதம்பரம் ஒரு தனி குடும்பம் கார்த்தி சிதம்பரம் ஒரு தனி குடும்பமாம் ரேஷன் கார்டு தனி தனியாக இருந்தால் தனி தனி குடும்பமாக கருத வேண்டும் எனவும் அவர் விளக்கம் கொடுக்க விழுந்து விழுந்து சிரித்தார் நேர்காணல் செய்த அசோகா.