24 special

இந்திய கடற்பரப்பில் உலவப்போகும் தேசிய மருத்துவமனை கப்பல்..!

indian ocean
indian ocean

இந்தியா : 2014க்கு பிறகு இந்திய அரசு நாட்டு எல்லைப்பாதுகாப்பை உறுதிசெய்துவருகிறது. அதேபோல வீரர்களின் பாதுகாப்பையும் அவர்களின் உடல் நலம் மனநலம் ஆகியவற்றையும் பேணிக்காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் இந்திய கடற்படைக்காக தேசியமருத்துவமனை கப்பல் ஒன்றை வாங்கவிருக்கிறது.


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்திய கடற்படைக்கு இந்திய கப்பல்கட்டும் தளங்களில் இருந்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் NHS (தேசிய மருத்துவமனை கப்பல்) ஒன்றை வாங்கவிருக்கிறது. இதற்கான ஒப்பந்த கோரிக்கையும் வெளியிட்டுள்ளது (RFI). கடற்படைக்காக வாங்கப்படும் இந்த மருத்துவகப்பலில் நோயாளிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட சிகிச்சையை வழங்கமுடியும்.

கடற்பரப்பில் சிக்கிக்கொண்ட அல்லது பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோர்க்கு அவசரசிகிச்சை இந்த கப்பலில் வழங்கமுடியும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த தேசிய மருத்துவமனை கப்பல் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி வடிவமைக்கப்படவேண்டும். கப்பலின் மேற்சுரம் மற்றும் இடது வலது புறங்களில் செஞ்சிலுவை குறியீடு வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படவேண்டும். 

250 நோயாளிகளை கவனிக்கும் வகையில் 117 கப்பல் ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இருக்கவேண்டும். இந்த NHS கப்பலில் 600பேர்வரை அனுமதிக்கப்படவேண்டும். இந்த NHSல் 15 அதிகாரிகள் 120 மாலுமிகள் இருக்கவேண்டும் மருத்துவக்குழுவில் 22 அதிகாரிகள் 14 மருத்துவ ஊழியர்கள் 81 மாலுமிகள் இடம்பெற்றிருக்க வேண்டும். 

இந்த கப்பல் குறைவான இடங்களுக்கே பயணப்பட அல்லது இடப்பெயர்ச்சி கொண்டிருக்கவேண்டும். மேலும் இந்த கப்பலின் ஆயுள் 20 ஆண்டுகள் என மேற்சொன்ன அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டு விரைவில் மத்திய அரசு மருத்துவகப்பலை வாங்கவுள்ளது.