ஆண்டவர் எப்பவும் தனி ரகம் தான்... இந்தியசினிமாவில் கமர்சியல் பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அதே வேலையில் கமல் மட்டும் தமிழ்சினிமாவை வேறு தளத்திற்கு கொன்று சென்றவர். கமலின் சினிமா ஓவொன்றுமே ஆயிரம் ஆயிரம் காலத்துக்கும் பேசப்படும் படைப்பாகவே இருக்கும். அந்த வரிசையில் அன்பேசிவம்,குணா,தேவர்மகன்,விருமாண்டி,ஹேராம் போன்ற படங்கள் வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது என நிரூபித்து காட்டியவர். சினிமாவிலேயே அப்படியென்றால் அரசியலில் சொல்லவா வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தன் மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் இல்லாமல் சிங்கிள் சிங்கமாகதான் களமிறக்கினார் கமல். கோவை தெற்கு தொகுதியில் அவரே வேட்பாளரானார். தேர்தலுக்கு முன் பிரசாரத்தின் போது கமல் அடித்த ஸ்டண்ட்ஸெல்லாம் அரசியலரங்கை அதிர வைத்தன. தன் இயக்கத்தை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஊழல் மிகுந்தவை, கறை படிந்தவை! எனும் ரேஞ்சில் பேசினார். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் உரை ஓடும் டி.வி.யை ரிமோட்டை தூக்கி வீசி உடைத்தபடி அவர் போட்ட ஸீனெல்லாம் எந்த சினிமாவிலும் வராத காட்சிகள்.
ஆனால் அந்த தேர்தலில் அவர் உட்பட அவரது வேட்பாளர்கள் அத்தனை பேரும் தோற்றனர். இந்த மரண மாஸ் அடிக்குப் பின் கமல்ஹாசனின் அரசியல் அப்ரோச்மெண்ட் மாறியுள்ளது. அவர் கூட்டணிக்கு தயாராகிவிட்டார் என்பதை அவரது சமீபத்திய செயல்கள் நிரூபிக்கின்றன. ராகுல்காந்தி பாதயாத்திரை சென்ற போது ஒரு நாள் அவருடன் கமல்ஹாசனும் நடந்தார். இதன் மூலம் காங்கிரஸுடன் அவர் கைகோர்க்கிறார் என்றார்கள். அதை, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததன் மூலம் நிரூபித்தார்.
2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே திமுகவின் தலைமையோடு நட்பு நெருக்கம் காட்டும் கமல்ஹாசன், கண்டிப்பாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடங்கிய திமுக கூட்டணிக்குள் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தை கொண்டு வந்துவிடுவார்! என்றே அரசியல் பார்வையாளர்கள் அழுத்தமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது இப்படியிருக்க கமல்ஹாசன் கனிமொழி. மற்றும் வானதி. இருவரது இமேஜையும் காலி பண்ணிவிட்டதாக பரவும் தகவல்தான் இப்போது செம்ம வைரல்.
அதாவது கோவை வடவள்ளியை சேர்ந்த இளம்பெண் ஷர்மிளா, தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தார். மீடியாவில் மிக பிரபலமான இவரை அரசியல் பெண் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து ‘இன்னும் பெரிதாய் சாதிக்கணும்மா நீ’ என்று ஊக்கப்படுத்துவார்கள். அப்படித்தான் வானதி சில வாரங்களுக்கு முன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணித்து, அவருக்கு ஊக்கம் தந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் கனிமொழியும் அந்த பேருந்தில் பயணித்து அவரை என்கரேஜ் செய்தார். அப்போது, அந்த பேருந்தில் பணிபுரியும் மற்றொரு பெண் கனிமொழியிடம் டிக்கெட் கேட்க, அதை ஷர்மிளா ஆட்சேபிக்க, பிரச்னை உருவானது. அடுத்த சில மணி நேரத்தில் வேலையை இழந்தார் ஷர்மிளா. ‘என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்க’ என்று ஷர்மி சொல்ல, ‘அவர்தான் வேலையை விட்டு தானாக விலகினார்’ என்று பேருந்து உரிமையாளர் துரை சொல்ல…இப்படியாக பெரிய விவாதம் மீடியாவில் போனது.
இந்த நிலையில் ‘அய்யோ பாவம் அந்த பொண்ணுக்கு வேலை போச்சு’ எனும் பேச்சு மக்களிடையே எழுந்த நிலையில், கனிமொழி எம்.பி. உடனே அவரை தொடர்பு கொண்டு வேறு பணிக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால் ஷர்மிளாவோ ‘நான் ஆட்டோ ஓட்ட போறேன் மேடம்’ என்றார். அதேப்போல் வானதி போன் பண்ணி தைரியம் தந்து, உதவிகள் வேண்டுமா? என்று கேட்டார். அவரிடமும் தான் ஆட்டோ ஓட்ட போவதாக சொன்னார் ஷர்மி.
இது இப்படியாக இருந்த நிலையில் இன்று ஷர்மியை சென்னைக்கு அழைத்த கமல்ஹாசன் அவருக்கு புது கார் ஒன்று வாங்கி கொடுத்து, ‘நீ சொந்தமாக கால் டாக்ஸி நடத்து’ என்று ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த விஷயம் வைரலாகி வருகிறது.