அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றங்களில் விரட்டி வருகிறது. ஆனால் அமலாக்கத்துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜி எடுக்க விடாமல் செந்தில் பாலாஜி மனைவி திமுகவின் வழக்கறிஞர் என் ஆர் இளங்கோவை வைத்து நீதிமன்றத்தில் வாதம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் எப்படியாவது செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விட வேண்டும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் அமலாக்கத்துறை தற்போது செந்தில் பாலாஜிக்கு ஒரு செக் வைத்துள்ளது. கைது செய்ய முற்படும்பொழுது நெஞ்சுவலி என்று படுத்துக்கொண்டார் செந்தில் பாலாஜி, பிறகு அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுதும் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒப்புதலையும் மீறி மருத்துவர்கள் அமலாக்கத் துறையை விசாரணை செய்ய விடாமல், உடல் நிலைசரி இல்லை என்று கூறி வந்தனர் என அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது!
இதனிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதமானது அவர் இயந்திரத்தனமான காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளார், அதோடு அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மெமோவை வாங்க மறுத்தார் என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது. அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் கிடையாது கஸ்டம்ஸ் சட்டம், ஜி எஸ் டி சட்டம், என் டி பி எஸ் சட்டம் போன்ற சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே செந்தில் பாலாஜி விசாரணை செய்வதற்கு அதிகாரம் உடையவர்கள் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ வாதிட்டார்.
இப்படி தனது முழு மூச்சையும் விசாரணைக்காக செலவிட்டு எப்படியும் இந்த வழக்கில் வென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பினருக்கு அமலாக்கத்துறை ஒரு அதிரடி ஆதாரத்தைக் கூறி ஷாக்கில் தள்ளியது
. அதாவது அமலாக்கத்துறை தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் துஷார் மேத்தா, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி பணம் வாங்கியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது அதனை அடிப்படையாக வைத்து தான் அவரை கைது செய்ய அதிகாரிகள் முற்பட்டனர். ஒருவேளை உரிய ஆதாரங்கள் இல்லாமல் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உறுதியானால் கைது செய்த அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 50,000 வரை அபராதம் விதிக்கவும் என்றும் கூறினார். மேலும் நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்தது, இதனால் அவரை சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறுவது சரியல்ல, ஆதலால் ஆட்கொணர்வு வழக்கை தொடர முடியாது, ஏனென்றால் நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்படவில்லை என்று வாதிட்டார்.
வென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் வசமாக சிக்கி உள்ளது, இறுதியில் இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜி தரப்பு மீதான தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையை நேற்று முடித்த நிலையில் அதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். மேலும் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி நீதிமன்றத்தில் வசமாக சிக்கியது செந்தில் பாலாஜிக்கு தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.