24 special

கட்சி ஆரம்பித்து தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட கமல்ஹாசன்

Kamalhasan,mk stalin
Kamalhasan,mk stalin

கட்சி, நடிப்பு, பிக் பாஸ் என பயணிக்கும் கமலஹாசனுன் தற்பொழுது அரசியலில் எங்கு செல்வது என்று தெரியாமல் திக்கற்று நிற்கின்றார் என ஆழ்வார்ப்பேட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. இடதுசாரி, வலதுசாரி என இல்லாமல் மய்யமாக இருப்பதாக கூறி இந்த கட்சியை ஆரம்பித்த பொழுது தனது பட விழாக்களை போன்று ஆடம்பரமாக ஆரம்பித்தார் கமல்ஹாசன்.  கட்சி ஆரம்பித்த காலத்தில் பெரிய அளவிலான விளம்பரங்கள், சமூக வலைதளத்தில் கட்சி பற்றிய அப்டேட்டுகள், இவர் வந்து இணைகிறார், அவர் வந்து இணைகிறார் என்பது போன்று விளம்பர செய்திகள்.

கமலஹாசனின் பிரம்மாண்ட படம் போல் கட்சியையும் பிரம்மாண்டம் ஆக்கினார். அதனை தொடர்ந்து கட்சி இயங்கி வந்தது. பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்பொழுது அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் தோற்றுப் போனார் அதன் பிறகு கட்சியில் இருந்த நிர்வாகிகள் இதுதான் சமயம் என கமலஹாசன் மீது குறைகூறி மாற்று கட்சிகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

கமலஹாசன் உடன் உலா வந்தவர்கள் அனைவரும் இங்கு கட்சி நடக்கவில்லை கார்ப்பரேட் கம்பெனி போல் இருக்கிறது, கமலஹாசன் அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை. அவர் படம் நடிப்பதுபோல் கட்சி நடத்துகிறார், என்ன செய்கிறார் என அவருக்கே தெரியவில்லை, திடீரென கட்சியில் இருக்கிறார்! திடீரென படப்பிடிப்பு செல்கிறார்! திடீரென பிக் பாஸுக்கு செல்கிறார்.

இப்படி இருந்தால் அரசியல் வாழ்க்கை என்னாவது என வெளிப்படையாகவே கூறிவிட்டு வெளியில் வந்தனர். இதனை தொடர்ந்து அடுத்த படியாக கமலஹாசன் விக்ரம் படத்தில் பிஸியானார் விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். படம் கமலஹாசனே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதுவரை வாழ்நாளில் கமல் படங்களில் இல்லாத வசூல் சாதனையை விக்ரம் திரைப்படம் பெற்றது.

இதன் காரணமாக கமலஹாசன் அவர்களுக்கு மீண்டும் அதிக சினிமா படங்கள் தனது நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிக்க வேண்டும் எனவும், தான் அதிக படங்கள் நடிக்க வேண்டும் எனவும் ஆசை துளிர் விட ஆரம்பித்தது. அதன் காரணமாக சிவகார்த்திகேயன், சிம்பு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வைத்து படங்கள் தயாரிப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டார். அது மட்டும் அல்லாமல் தனது நின்று போன படமான இந்தியன் 2 படம் மேலும் புதிய இரண்டு படங்களையும் ஒப்பந்தம் செய்து திரையுலகப் பயணத்தில் பிஸியானார்.

இதன் காரணமாக மக்கள் நீதி மையத்தில் இருந்த மிச்ச சொச்ச நிர்வாகிகளுக்கும் யோசனை ஏற்பட்டது ஏற்கனவே படங்கள் சரியாக ஓடாத போதே இவர் அரசியலுக்கு பகுதி நேரமாக தான் வேலை செய்து வந்தார். இப்பொழுது படங்கள் ஓடி விட்டது இப்பொழுது முழு நேரத்தில் வேலை செய்ய சினிமாவுக்கு சென்று விடுவார் அரசியல் என்னாவது என ஒவ்வொரு நிர்வாகிகளாக அச்சத்தில் இருந்து வந்தனர். குறிப்பாக கட்சியின் மூத்த நிர்வாகி எனக் கூறப்பட்ட பழ.கருப்பையா இனி மக்கள் நீதி மய்யமும் வேண்டாம், கமலஹாசனும் வேண்டாம் எனக் கூறி அங்கிருந்து வெளியே வந்து தனியே கட்சியும் துவங்கி விட்டார்.

அந்த சூழலில் கமலஹாசன் திமுகவுடன் அதிக நெருக்கம் காண்பிக்க ஆரம்பித்தார். திமுகவின் விழாக்களில் உறுப்பினர் அட்டை இல்லாத திமுகவினராகவே வலம் வந்தார் கமல்ஹாசன்.  திமுகவை சேர்ந்தவர்களும் ஏதாவது கட்சி விளம்பர வேண்டும் என்றால் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிரபலப்படுத்த கமலஹாசனை அழைப்பதே வழக்கமாக்கிக் கொண்டனர் முதல்வர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சி மற்றும் இன்ன பிற திமுக விழாக்களில் கமலஹாசன் தலை காட்ட ஆரம்பித்தார் அது மட்டுமல்லாமல் அவ்வப்போது திமுக எடுக்க முடிவுகளுக்கு ஆஹா ஓஹோ! இதுவல்லவோ முடிவு, இதுவல்லவோ ஆட்சி என்றெல்லாம் கூறி புகழ் பாட ஆரம்பித்தார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கருணாநிதி அவர்களை அவமானப்படுத்த ஸ்டாலினின் தந்தை கருணாநிதி என்றாலே சொன்னால் போதுமானது எனக் கூறியவர் தேர்தல் முடிந்த திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆஹா இதுவல்லவோ ஆட்சி! இப்படித்தான் இருக்க வேண்டும் ஆட்சி என்றால் என திமுக ஆட்சியை புகழ் பாட ஆரம்பித்தது தீவிர கமலஹாசன் விசுவாசிகளுக்கே பிடிக்கவில்லை என கூறலாம்.

காங்கிரஸ் கட்சிக்காரர்களே நிறைய பேர் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கு பெறாமல் எஸ்கேப் ஆகி கொண்டு இருக்க இவர் இங்கு நடந்த யாத்திரையில் எல்லாம் கலந்து கொள்ளாமல் டெல்லியில் நடந்த யாத்திரையில் சென்று கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் உறவாடி நெருக்கம் காட்டி வந்தார் அதன் பின்னணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்க வேண்டும் என திட்டமாக இருந்தது என செய்திகள் உலா வந்தன. இப்படி அரசியல் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என்று கமல்ஹாசனுக்கே தெரியாத அளவிற்கு தனது மக்கள் நீதி மய்யத்தை நடத்தி வந்தார்.

இது மட்டுமல்லாமல் சமீப காலமாக மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கைகள் இன்னும் தேய்ந்து விட்டன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி நிர்வாகிகள் மத்தியில் கருத்து கேட்டதாக கூறப்படுகிறது. அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்வாகிகளின் அரசியல் சுவாரசியம் குறைந்து காணப்பட்டதாலும் அரசியல் ஆர்வம் அதிகம் அவர்களுக்கு இல்லை என கமலஹாசன் உணர்ந்து கொண்டதாலும் அந்த கூட்டத்தை அப்செட்டாக முடித்துக் கொண்டு வெளியேறினார் என்பது தெரிய வந்துள்ளது.

அடுத்த பிக் பாஸ் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது, மேலும் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் அடுத்த படங்களை தயாரிப்பதற்கு ஆரம்பித்துவிட்டது, இதற்கிடையில் அரசியல் கவனிக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் நேரம் இல்லை என்று கமலஹாசன் மற்ற பணிகளை கவனித்து வருகிறார். இப்படி அரசியலில் எங்கு செல்வதென்றே தெரியாத நிலையில் கமலஹாசன் இருந்து வருவதால் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் மக்கள் நீதி மய்யத்தில் மீதம் இருக்கும் நிர்வாகிகளாவது தாக்குப் பிடிப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கமலஹாசனின் கட்சி துவங்கப்பட்ட பொழுது ஒரு பேச்சு அடிபட்டது இவர் தான் திராவிட கட்சிகளுக்கு மாற்று, திரை உலகில் இருந்து வருகிறார் திரையுலகில் அனைத்து நுணுக்கங்களையும் கற்று தேர்ந்தவர் அதுபோல் அரசியலையும் நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து தமிழகத்தை புதிய பாதையில் அழைத்துச் செல்வார் என்றெல்லாம் சொன்னார்கள். இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் இயக்குனர் பாரதிராஜா, 'கமலஹாசனின் அரசியலை தாங்க மாட்டீர்கள் அவன் முழுமையாக கற்றுக் கொண்டு விட்டு வந்தால் நீங்கள் அரசியல் செய்ய முடியாது' என்றெல்லாம் பில்டப் கொடுத்தார். ஆனால் எத்தனை காட்சிகள் ஆனாலும் ஒரே டேக்கில் திரைக்குப் பின்னால் நடிக்க தெரிந்த உலக நாயகன் கமலஹாசனுக்கு அரசியல் உலகில் நடக்க கூட தெரியவில்லை என்பதே உண்மை.