வரும் 2024 மே மாதத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலம் முடிவுக்கு வருவதால் இன்னும் 12 மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தேர்தலை எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்தலாம்? ஒரு கட்டமாக தேர்தலை நடத்தலாமா? அல்லது இருக்கட்டமாக நடத்தலாமா? என ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலுக்கான பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை பல கட்சியினர் தற்போது தொடங்கிவிட்டனர் என்றே சொல்லலாம், இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர இருக்கலாம் என தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களை நடத்தும் போதே நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தி விடலாமா என டெல்லி யோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஐந்து மாநில தேர்தல்களுடன் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்க்கட்சி களுக்கு அது பின்னடைவாக அமையும் என பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்திலேயே தேர்தல் வரும் என திமுக கூட்டணியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கும் 2023 டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் நிலையில் இந்த தேர்தல்களுடன் நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் என்று டெல்லி தலைமையகம் ஆலோசித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம் பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
அதாவது இந்த ஐந்து மாநிலங்களில் நடத்தப்படும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளது, இதனால் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் இந்த தோல்விகள் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக்குவதிலும் சற்று சிரமம் ஏற்படும் ஆதலால் இந்த மாநில தேர்தலோடு நாடாளுமன்ற தேர்தலையும் நடத்த திட்டமிட்டு வருவதாக ஒரு ஊகம் கிளம்பி வருகிறதே இது உண்மையா என்று தனது டிவிட்டர் பதிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம் பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் ஒரு கணிப்புகள் நிலவி வருகிறது. அதோடு கர்நாடகாவில் வெற்றி பெற்றதன் விளைவாக காங்கிரஸ்' க்கு அது ஒரு உத்வேகத்தை கொடுத்து பாஜகவை அடுத்த முறையில் வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் நம்பிக் கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இந்த வருடம் ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும் இந்த தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலையும் டிசம்பர் மாதத்திலேயே நடத்தலாம் என்று கருத்துகள் எழுந்து வருவதாக எம் பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமாருக்கு முன்பே திமுகவின் எம் பி டி ஆர் பாலுவும் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி நாடாளுமன்றத்தை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே நாடாளுமன்ற தேர்தல் வரலாம் என்று கூறியுள்ளது எதிர்க்கட்சிகள் மத்தியில் குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ளது
அதற்குள் நாம் ஏதேனும் செய்து வெற்றியைப் பெற முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்த திமுகவிற்கு தற்போது நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்தால் அது பின்னடைவு ஏற்படுத்தும் என திமுக தலைமை கருதுவதால், திமுக கூட்டணிக்கு கூடிய சீக்கிரம் தேர்தல் அறிவிக்கப்படும் என்ற தகவல் தலைவலியாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.