தமிழ் சினிமாவில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பேரரசு, திருப்பாச்சி படம் இயக்குனர் பேரரசிற்கும் இளைய தளபதி விஜய்க்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது திரையரங்குகளில் இரண்டு நாட்களுக்கு மேலும் திருப்பாச்சி படம் ஓடி சாதனை படைத்தது. அதற்குப் பிறகு இயக்குனர் பேரரசு இயற்றிய சிவகாசி, திருப்பதி என்ற ஒரு சில படங்களை வெற்றியை தந்த நிலையில் அதற்கு பிறகு அவர் எடுத்த படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை. இதற்குப் பிறகு இவர் தீவிர இந்து மதத்தைச் சார்ந்த பல கருத்துக்களை முன்வைத்து வருவார் இதனால் இவருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் பல நேரங்களில் வாக்குவாதமும் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பல நேரங்களில் திராவிட கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தும் கருத்துக்களை பொதுவெளியில் முன்வைத்து திமுகவை பெரும் சிக்கலில் சிக்க வைத்து விடுவார்.அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மாவீரன் பிள்ளை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, எதிர்க்கட்சியாக இருக்கும் வரை மதுவிற்கு எதிரான குரல்களை கொடுக்கிறார்கள் ஆனால் ஆளுங்கட்சியான பிறகு அந்த குரலையே காணும் யார் அவர்களின் குரல்வளையை நெரிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை மதுவில் அரசாங்கத்தை நடத்துவது ஒரு கேவலமான செயல் எங்களுக்கு எந்த ஒரு இலவசமும் தேவையில்லை பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை, பேருந்தும் இலவசமாக தேவையில்லை என இயக்குனர் பேரரசு திமுகவை குறிப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இவரின் இந்த கருத்து மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டும் வகையிலும் அமைந்தது.
அதற்குப் பிறகு மற்றொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, திராவிடர்களால் கடந்த 50 வருடங்களாக தமிழகம் வளர்ந்தது இன்று இங்கே உள்ள இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசியிருந்தார் ஆனால் அது உண்மையல்ல! தமிழர்களால் தான் தமிழகம் வளர்ந்தது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழ் அறிவால்தான் கதை எழுதினார்கள் தவிர திராவிட அறிவால் இல்லை என்று திமுகவை கிழித்து தொங்க விட்டார். இந்த நிலையில் இயக்குனர் பேரரசு தற்பொழுது காமராஜர் இந்து தான் என்று பேசிய விவகாரம் பெரிதும் பேசப்படுகிறது குறிப்பாக, கடவுள் இல்லை என்பவர்களுக்கு பெரும் சவுக்கடியாக இவரது பேச்சு அமைந்துள்ளது.
அதாவது கமலநாதன் புவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பாய் என்ற படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, தணிக்கை சான்றிதழ் இப் படத்திற்கு கிடைத்துள்ளது என்றால் நிச்சயமாக இந்த படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாக தான் இருக்கும். மதம் என்பது ஒரு மனிதனுக்கு அடையாளமும் அல்ல மனிதாபிமானம் தான் மதம் மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை! அன்னை தெரசாவின் கருணையில் யாராவது அவரை கிறிஸ்தவராக பார்த்தோமா அப்துல் கலாமை யாராவது இஸ்லாமியராக பார்த்தோமா? கர்மவீரர் காமராஜரும் ஒரு இந்துவாகப் பிறந்தவர் தான் ஆனால் அவரை யாரும் இந்துவாக பார்க்கிறோமா மனிதநேயம் உள்ள ஒரு சிறந்த ஆட்சியாளராக பார்க்கிறோம் என்று இயக்குனர் பேரரசு பேசியது பற்றி இணையங்களில் பல விமர்சனங்கள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் காமராஜர் இந்துதான் எனக்கூறியது இடதுசாரிகளுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.