24 special

திமுகவில் கொளுத்தி போட்ட அந்த ஒரு வார்த்தை....குழம்பி நிற்கும் உடன்பிறப்புகள்!

Stalin, Udhayanidhi
Stalin, Udhayanidhi

தமிழகத்தில் தற்போது யார் முதலமைச்சர் என்ற நிலை தெரியாமல் தான் திமுக கட்சி செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது முதலமைச்சர் வெளியில் வந்து மக்களை சந்திக்காமல் இருந்து வந்தார். இதே போல் அமைச்சர்கள் மா.சூப்ரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் என பலரும் அவர்களது போக்கில் செயல் பட்டு வருவதாக மக்களே வருத்தத்துடன் கூறி வந்தனர். 


இந்நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ரூ.11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவிற்கான பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதில் பங்கேற்றிருந்த புரோகிதர்,

" நீங்க நினைத்தால் எல்லாமே நடக்கும்..நீங்கதாண்ணே வருங்கால முதல்வர் என்று அமைச்சர் நேருவை பார்த்து சொல்ல.. அங்கிருந்தவர்கள் உடனே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதற்கு அமைச்சர் நேரு..ஏய் சும்மா இருய்யா என்பது போல் ரியாக்ஷன் கொடுக்க அங்கு சிரிப்பலை எழுந்தது. இந்த விவகாரம் நிகழ்ச்சி நடந்த இடத்தில் சிரிப்பலை ஏற்படுத்தியிருந்தாலும் அறிவாலயத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், அவர்களுக்குள் அடுத்து யார் முதலமைச்சர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அடுத்த மாதம் மகுடம் சூட்டும் போது திமுக கட்சியில் பெரிய மாற்றம் ஏற்பட கூடும் என கூறுகின்றனர். 

ஏற்கனவே, துரைமுருகன் முதலமைச்சர் பதவிக்கு போட்டி போடும் நேரத்தில் நேருவும் அந்த போட்டியில் இணைந்துள்ளார் என்றும் வரும் காலத்தில் திமுக கட்சி பெரிய முறிவு ஏற்பட கூடும் வாரிசு அரசியல் நடத்துவதால் தான் இந்த பிரச்சனை எழுகிறது. கே.என் நேரு நினைத்திருந்தால் எனக்கு அந்த ஆசையில்லை மிருக்காது என புரோகிதர் சொல்லும்போது சொல்லியிருக்கலாம் ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் சிறிது கொண்டு சும்மா இருங்க என சொல்லியிருப்பதால் அறிவாலயத்தில் உள்ள திமுகவினர் தீவிர விசாரணையில்  இறங்கியுள்ளார்களாம்.