சண்டை பயிற்சி மாஸ்டரும், இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்தவருமான கனல் கண்ணன் ஆளுநர் vs முதல்வர் குறித்து போட்ட போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று தமிழகமே பெரும் விவாத பொருளாக மாறி இருக்கும் சம்பவம் தமிழக சட்ட சபையில் ஆளுநர் செய்த சம்பவம்தான், தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசிக்க முடியாது என ஆளுநர் ஒரே போடாக போட பதிலுக்கு ஆளுநர் உரையில் பாதியை படிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றசாட்டு கூற சட்ட சபையே பரபரப்பு ஆனது.
இந்த சூழலில் ஆளுநரை அவையில் வைத்து கொண்டே முதல்வர் குற்றசாட்டுகள் கூற அருகில் இருந்த ஆளுரின் பாதுகாவலர் முறையாக தமிழாக்கம் செய்து கூற அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர், வழக்கமாக ஆளுநர்கள் உரை முடியும் வரை அவையில் இருப்பது வழக்கம் அதே நேரத்தில் முதல்வரும் ஆளுநர் உரை மீது எதிர்ப்பு பதிவு செய்யாமல் இருப்பது வழக்கம்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் திடீர் என்று ஆளுநர் மீது குறையை கூற பதிலுக்கு ஆளுநறும் சென்று விட்டார். இந்த சூழலில் இந்த சம்பவத்தை நக்கல் செய்யும் விதமாக கனல் கண்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில்,
எதிர்க்கட்சிகள் அடிச்சப்போ ஆளுநர் கிட்ட போனேன்... இப்போ அந்த ஆளுநரே அடிச்சா நான் எங்க போவேன்...!!!!??? என நக்கலாக குறிப்பிட்டுள்ளார் கனல் கண்ணன்.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, கிழிந்த சட்டையுடன் ஆளுநரிடம் புகார் கொடுத்தார், தற்போது அதையும் சட்ட சபையில் இன்று நடந்த விவாகரத்தையும் ஒப்பிட்டு கனல் கண்ணன் கிண்டல் அடித்து பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேரும் அரசியல் அதிர்வலைகளுக்கு மத்தியில் ஆளுநர் இன்று சட்ட சபையில் திராவிட மாடல் என்ற பெயரை அடியோடு படிக்காமல் விட்டது, உண்மையில் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும்
ஆளுநர் பதவி என்பதே டம்மி பதவி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசிற்கு தான் அதிகாரம் இருக்கிறது என திமுகவினர் மேடை தோறும் சொல்லிவந்த நிலையில், தனது அதிகாரம் பவர் என்ன என்பதை ஆளுநர் நிரூபித்து இருக்கிறார் என்றே கூறவேண்டும் அதே நேரத்தில் சினிமாவில் 80 சதவிகிதமும் பொதுவாழ்வில் 20 சதவிகிதமும் கவனம் செலுத்தி வந்த மாஸ்டர் கனல் கண்ணனை கைது, அழைக்கழிப்பு என்று செய்து வந்த தமிழக அரசால் இப்போது அதிரடியாக தீவிர அரசியல் கருத்துக்களை கனல் கண்ணன் அவரது பாணியில் தெரிவித்து இருப்பது ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றே கூறலாம்.