24 special

இனிமேல் அடம் கிடையாது.... திருந்திய ஏ.ஆர்.ரஹ்மான்....!

AR Rahnan, pirai sudan
AR Rahnan, pirai sudan

தமிழ் சினிமாவில் இசைப்புயல் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரஹ்மான், இவர் அறிமுகமான முதல் படத்திலே தேசிய விருது பெற்றவர். தனது திரை வாழ்க்கையில் விமர்சனங்களை சந்திக்காமல் வந்து கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான் முதல் முறையாக பாலிவுட் தனக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு தன்னை எதிர்க்கும் ஒரு கூட்டம் இருப்பதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு பிரபல பாடலாசிரியர் பிறை சூடன் ஒரு முறை ஏ ஆர் ரகுமானின் வீட்டிற்கு சென்ற பொழுது ஏ ஆர் ரகுமானின் தாயார் இங்கு வரும்பொழுது விபூதி குங்குமம் எல்லாம் வைத்துக் கொண்டு வரக்கூடாது என்று கூறியதாகவும் அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் பிறைசூடன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்த விவகாரம் ஏ ஆர் ரகுமானுக்கு பல விமர்சனங்களை பெற்று தந்தது. ஏனென்றால் பாடலாசிரியர் பிறை சூடன் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களையும் 5000 பக்தி பாடல்களையும் இயற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் சார்ந்த வழிபாட்டின் மீது நம்பிக்கையுடன் இருக்கலாம் அதற்காக பிற சமூகம் சார்ந்த வழிபாட்டு முறைகளின் மீது இப்படி வெறுப்பை காட்டக்கூடாது என விமர்சனங்கள் எழுந்தது, மேலும் இந்த பிறைசூடன் சர்ச்சை விவகாரத்திற்கு பிறகு இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் எதுவும் விளக்கமளிக்காமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த அளவிற்கு தன் சமுதாயம் மீது பற்றாக இருந்த ஏ ஆர் ரகுமான் தற்பொழுது மனம் மாறி கிருஷ்ணரின் கீர்த்தனைகளை கேட்க ஆரம்பித்துள்ளார். அதாவது ஏ ஆர் ரகுமான் தனது துபாயில் உள்ள இல்லத்தில் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்ற கடவுள் கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்ட பக்தி பாடல் அடங்கிய நிகழ்வினை நடத்தி உள்ளார். அந்த நிகழ்வில் அவரும் மற்ற ஏராளமான பங்கேற்றுள்ளனர், அதோடு ஏ ஆர் ரகுமான் இந்த நிகழ்வில் பங்கேற்றது மட்டுமின்றி கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்து பக்தி பாடலை ரசித்து கேட்டு அதனை வீடியோ எடுக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தனது சமுதாயத்தில் நிலை கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான் திடீரென இந்து கடவுளான கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடலை அரங்கேற்றும் நிகழ்ச்சியை தனது வீட்டில் ஏற்பாடு செய்து அதில் அவர் கலந்து கொண்டு அதன் பாடலை மகிழ்ச்சியுடன் கேட்டு மகிழ்ந்து கொண்டிருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இந்த வீடியோ வேறு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த அளவிற்கு இஸ்லாமியத்தில் தீவிரமாக இருந்த ஏ ஆர் ரகுமான் தற்பொழுது கிருஷ்ண கீர்த்தனைகளை ரசிக்கும் அளவிற்கு வந்தது பெரிய மாற்றம் தான் என விமர்சனங்கள் எழும் வகையில் சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் பறக்கின்றன. 

முன்னதாக ஏ ஆர் ரகுமான் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி ஏ ஆர் ரகுமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதோடு ஏ ஆர் ரகுமானின் ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகுதான் இந்த மாற்றம் எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் இந்த வீடியோ தற்போது இணையங்களில் படு வைரலாகிறது குறிப்பிடத்தக்கது.