24 special

சிக்க வைக்க நினைத்து வசமாக சிக்கிய திமுக எம்.பி கனிமொழி சோமு நிலைமையே பாவம்!

kanimozhi, nvn somu
kanimozhi, nvn somu

nvகடந்த டிசம்பர் நான்காம் தேதியிலிருந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என் சோமு குறைந்தபட்ச மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இயங்கும் ஆம்புலன்ஸ்களால் உயிரிழப்புகள் அதிகமாகிறதா இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பர்வீன் பாவர், மாநில அரசுகளின் நேரடி நிர்வாகத்தில் தான் மருத்துவ உள்கட்டமைப்பு அவசரக்கால மருத்துவ தேவைகளை உறுதிப்படுத்துவது மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துவது போன்றவை வருகிறது இருப்பினும் இந்த அனைத்து விஷயங்களையும் செயல்படுத்த தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை  மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. இந்த உதவிகள் என்பது மாநில அரசின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.


நடைமுறைச் செலவுகளான ஆம்புலன்ஸ்களில் உள்ள கட்டுப்படுத்தும் கால் சென்டர், ஜிபிஎஸ் கருவி, குறைந்தபட்ச மருத்துவ உபகரணங்கள் போன்றவை மாவட்ட அளவில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களால் கண்காணிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இந்த சான்றுகளை அடிப்படையாக வைத்து மத்திய அரசு அதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அவசர அழைப்புகள் வந்தவுடன் ஒரு ஆம்புலன்ஸ் எவ்வளவு விரைவாக குறிப்பிட்ட இடத்தை அடைகிறது ஒரு நாளைக்கு எத்தனை முறை ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது என இதர பயன்பாடுகள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டு தான் ஒரு ஆம்புலன்ஸின் செயல்பாடு திறன் முடிவு செய்யப்படுகிறது என்றும் மேலும் ஆம்புலன்ஸ்களில் உள்ள செயல்பாடுகளின் தரத்தை உயர்த்தும் நூல்கள் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தேசிய ஆம்புலன்ஸ்களின் சேவைகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த அமைப்புதான் உயிர்காக்கும் நவீன வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் களையும் குறைந்தபட்ச உயிருக்கு வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்களையும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்களையும் வாங்க உதவி புரிகிறது என்றார். 

அதோடு மத்திய அரசானது 5 லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தது ஒரு நவீன உயிர் காக்கும் கருவிகளைக் கொண்ட ஆம்புலன்ஸும் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தபட்ச உயிர் காக்கும் கருவிகளைக் கொண்ட ஒரு ஆம்புலன்ஸும் இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆதலால் மாநில அரசுகள் குறைந்தபட்சம் இந்த இலக்கை அடைய இன்னும் எத்தனை ஆம்புலன்ஸ்கள் தேவை என்பதை அறிந்து கொண்டு அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் இன்றைய தேதியில் 2957 உயிர்காக்கும் நவீன கருவிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ்களும் குறைந்தபட்ச உயிர் காக்கும் கருவிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் கிட்டத்தட்ட 14,603 நோயாளிகள் பயணத்திற்கான வாகனங்கள் 4259ம், இருசக்கர வாகனங்கள் 81, படகுகள் 17 போன்றவை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது என்று திமுக எம்பி யின் கேள்விக்கு நெத்தியடி பதிலளித்தார். 

அதாவது திமுக எம்பி கனிமொழி என்.வி.என் சோமு ஆம்புலன்ஸ் விவகாரத்தில் பாஜக என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அறிந்து கொண்டு அதனை செய்தியாக்கி, அரசியலாக்கி மக்கள் மத்தியில் பாஜக அரசு மருத்துவ கட்டமைப்பில் பலகீனமாக இருக்கிறது என தேர்தல் நேரத்தில் பேச நினைத்த திட்டம் அனைத்தும் மத்திய அமைச்சர் பதிலால் தவிடுபொடி ஆகிவிட்டது.கேள்வி எழுப்ப ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கை நிர்ணயித்து பாஜக தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு கொண்டிருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்க வேறு எந்த கேள்வியும் கேட்க முடியாமல் கப்சிப் என்று அமைதியாகிவிட்டார். இப்படி நாடாளுமன்றத்தில் பாஜக அரசை அவமதிக்க நினைத்து கப்சிப்பென்று திமுக எம்பி கனிமொழி சோமு ஆன விவகாரம் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.